பொது செய்தி

இந்தியா

உ.பி.,யில் தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை: தமிழகத்தில் பின்பற்றப்படுமா?

Updated : மே 30, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
லக்னோ: உ.பி.,மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இதுபோன்று நடவடிக்கையை பின்பற்றுமா தமிழக அரசு? நாடு முழுவதும் இரண்டாவது கோவிட் அலை வேகமாக பரவி வருகிறது. பல்வேறுமாநிலங்கள் தொற்று குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பு அடைந்துள்ளன. தமிழகம் கேரளா ,

லக்னோ: உ.பி.,மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இதுபோன்று நடவடிக்கையை பின்பற்றுமா தமிழக அரசு?



latest tamil news



நாடு முழுவதும் இரண்டாவது கோவிட் அலை வேகமாக பரவி வருகிறது. பல்வேறுமாநிலங்கள் தொற்று குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பு அடைந்துள்ளன. தமிழகம் கேரளா , கர்நாடகம் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் அவை தற்போது குறைந்து வருகிறது. இதனிடையே கோவிட் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு கோவிட் மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசி மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இருப்பினும் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

இதில் உ.பி., மாநிலம் ஒரு படி மேலாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றிற்கு தடுப்பூசி செலுத்துவற்காக அதிகாரிகள் குழுவாக சென்றனர். தடுப்பூசி போட வருவதை கண்ட கிராம மக்கள் தங்கள் கிராமத்தின் அருகில் உள்ள ஆற்றில் குதித்து தலைமறைவாகினர். இதனால் உயிர்பலி ஆகிவிடுமோ என்று அஞ்சிய அதிகாரிகள் குழு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னர் தடுப்பூசி போடப்படும் என கூறினர்.


latest tamil news



இதனை தொடர்ந்து அதே உ.பி., மாநிலத்தில் எடவா மாவட்டத்தில் மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ள அதிகாரியான ஹேம்சிங் எடவா பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மது விற்பனை செய்யும் தனியார் உரிமையாளர்களிடம் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் காட்டினால் மட்டுமே மது விற்க வேண்டும். என கூறினார். தொடர்ந்து மது வாங்க வரிசையில் நின்றவர்களிடம் அவர் கேள்விகேட்ட போது தாங்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கூறினர். இதனையடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் மது கடை உரிமையாளர்கள் விதிகளை மீறுகிறார்களா என்பதை நான் மீண்டும் சோதனை செய்ய வருவேன் என கூறினார்.

தொடர்ந்து பிரோசாபாத் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே அவர்களுக்கு மே மாத சம்பளம் கிடைக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 45 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள போதுமான தடுப்பூசி உள்ளதா என்பதை அதிகாரிகள் தெளிவு படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
31-மே-202110:58:30 IST Report Abuse
J. G. Muthuraj தடுப்பூசி சர்டிபிகேட் ஆதார் கார்டை விட முக்கியமாகும்....நிலை ஏற்படும்......
Rate this:
Cancel
31-மே-202110:43:14 IST Report Abuse
ஸாயிப்ரியா மது தடுப்பூசியின் செயல் திறனை அழிக்குமா? இது தப்பான வியாபாரத் தந்திரம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
31-மே-202110:14:10 IST Report Abuse
M  Ramachandran எண்ணே திமிர் முதலில் நீ பேசிய தவறுக்கு பதில் கூற மனதில் தெம்பில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X