அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம்களில் கட்சியினர் தலையீடு: தடுத்து நிறுத்த ஓ.பி. எஸ் ., வலியுறுத்தல்

Updated : ஜூன் 01, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை:'தடுப்பூசி முகாம்களில், அரசியல் கட்சியினரின் தலையீட்டை, முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செ்ல்வம்., முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் தற்போது, 18 முதல், 44 வயதினருக்கான, தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி இருப்பை கணக்கில் வைத்து, செய்தித்தாள் போடுவோர், பால்
 தடுப்பூசி முகாம், கட்சியினர் ,தலையீடு,  ஓ.பி. எஸ் ., வலியுறுத்தல்

சென்னை:'தடுப்பூசி முகாம்களில், அரசியல் கட்சியினரின் தலையீட்டை, முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செ்ல்வம்., முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் தற்போது, 18 முதல், 44 வயதினருக்கான, தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி இருப்பை கணக்கில் வைத்து, செய்தித்தாள் போடுவோர், பால் விற்பனையாளர்கள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், மின்வாரிய பணியாளர்கள்.பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு முன்னுரிமை அளித்து, மே, 22ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.


அனுமதிஇதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட லக்காபுரத்தில், கடந்த, 27ம் தேதி, தடுப்பூசி முகாம் நடப்பதாக, முன்கள பணியாளர் களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.அதையடுத்து, அவர்கள் தடுப்பூசி முகாமுக்கு சென்றனர். ஆனால், யாரும் அனுமதிக்கப்படவில்லை. பக்கவாட்டு வழியாக, தி.மு.க., பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், முகாமுக்கு வெளியே நின்றிருந்த, முன்கள பணியாளர்கள், காவல் துறையால் அப்புறப்படுத்த பட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பியதாக செய்தி வந்துள்ளது.இதுபோன்ற சம்பவங்கள், ஆங்காங்கே நடப்பதாக, தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்களால், முன்கள பணியாளர்கள் அலைக்கழிக்கப்படுவதுடன், கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கிறது. மேலும், முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு, தி.மு.க.,வினரின் செயல் குந்தகம் விளைவிப்பது போல உள்ளது.தடுப்பூசியின் இருப்புக்கு ஏற்ப, ஒவ்வொரு பகுதியிலும், முன்னுரிமை பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, காவல் துறையினர் உதவியுடன், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற முகாம்களில், அரசியல் கட்சியினரின் தலையீட்டை, முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.


முதல்வருக்கு நன்றி

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., நன்றி தெரிவித்துள்ளார்.அவர் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்து, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த 28ம் தேதி அறிக்கை வழியாக முதல்வரை கேட்டுக் கொண்டேன்.என் வேண்டுகோளை ஏற்று, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி.இவ்வாறு பன்னீர்செல்வம்., தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி உடனடியாக பொதுக்குழு கூட்டி இந்த ஓ பி எஸ் ஐ கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் இதய தெய்வம் திரு எடப்பாடி K பழனிசாமி அய்யா அவர்களை காலில் விழுந்து மன்றாடி கதறி கண்ணீர் விட்டு இறைஞ்சி கேட்டுக்கொள்கிறேன். கட்சியின் "மானத்தை" காக்க வேண்டுகிறேன்...
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
31-மே-202115:32:19 IST Report Abuse
Srinivas.... ஆமாம்....உன்னோட கூட்டாளி மணிகண்டன் செய்த லீலைகள் வெளிவந்து நாற்றமாக நாறுதே தெரியுமா? அது ஒன்றும் புதிது இல்லையா?
Rate this:
Cancel
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
31-மே-202114:31:58 IST Report Abuse
R.PERUMALRAJA சசிகலாவை விட இவர் முகத்தில் பவுடர் / மேக் அப் அதிகமாக இருக்கும் போல.. கம்மியா வேஷம் போடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X