அரசியல் செய்தி

தமிழ்நாடு

எல்லாத்தையும் சரி செய்யலாம்! நம்பிக்கையூட்டுகிறார் சசிகலா

Updated : ஜூன் 01, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை:'விரைவில் வந்து விடுவேன். கட்சியை நல்லா கொண்டு வந்து விடுவோம்' என, தன் ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து சசிகலா பேசி வருவது அ.தி.மு.க.,வில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.கஷ்டமாக உள்ளதுசட்டசபை தேர்தலுக்கு முன், அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, மீண்டும் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார். அதற்கு முன்னோட்ட மாக, தன்
 எல்லாத்தையும், சரி செய்யலாம்,சசிகலா, நம்பிக்கை

சென்னை:'விரைவில் வந்து விடுவேன். கட்சியை நல்லா கொண்டு வந்து விடுவோம்' என, தன் ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து சசிகலா பேசி வருவது அ.தி.மு.க.,வில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


கஷ்டமாக உள்ளது



சட்டசபை தேர்தலுக்கு முன், அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, மீண்டும் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார். அதற்கு முன்னோட்ட மாக, தன் ஆதரவாளர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு நாள் தோறும் பேசி வருகிறார். அந்த வகையில், அவர் பேசியிருப்பதாவது:

சுரேஷ் நல்லா இருக்கீங்களா. கொரோனா காலம் என்பதால், ஜாக்கிரதையாக இருங்க. அவர்கள் சண்டை போட்டுக் கொள்வது, கஷ்டமாக உள்ளது. நாங்கள் கஷ்டப்பட்டு, அந்த கட்சியை வளர்த்தோம். கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விரைவில் வந்து விடுவேன். கட்சியை நல்லா கொண்டு வந்து விடுவோம்.நாமக்கல் கோபால் பேசுகிறீர்களா? உங்கள் கடிதம் வந்தது. கொரோனா என்பதால், போனில் பேசுகிறேன். விரைவில், எல்லாரையும் பார்க்கப் போகிறேன். எல்லாத்தையும் சரி செய்து விடலாம். கவலைப்படாமல் இருங்கள்.


நல்ல முடிவு

தலைவர், அம்மா எப்படி கட்சியை வைத்திருந்தாங்களோ, அந்த அளவுக்கு கட்சியை கொண்டு போய் விடுவேன். எல்லாத்துக்கும் நல்ல முடிவு வந்து விடும். விரைவில், நான் வந்து நல்லது செய்வேன்.இவ்வாறு, இருவரிடம் பேசி உள்ளார்.அரசியலுக்கு வர முடிவு செய்துள்ள சசிகலா, அதற்கு முன்னோட்டமாக ஆதரவாளர்களிடம் பேசி வருவது அ.தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
31-மே-202120:57:21 IST Report Abuse
மதுரை விருமாண்டி எல்லாத்தையும் சரி செய்ய உத்தேசமா? இல்லை எல்லாத்தையும் ஒரு வழி செய்ய முடிவா சதிகலா அவர்களே? மிக்சர்வாயர் தருமயுத்தர் உசுப்பி விட்டாரா?
Rate this:
Cancel
Muthiah.G - Tamil Nadu,இந்தியா
31-மே-202118:55:19 IST Report Abuse
Muthiah.G காலம் போன கடைசில் ஆடியோவில் கத்துவது நல்லதல்ல.அதிமுக தொண்டர்களுக்கு நன்கு தெரியும்..அதிமுக பற்றி சசிகலாவிற்கு அக்கறை இருந்திருந்தால் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் தினகரனை ஓங்கி ஒரு போடு போட்டு ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் முன்னிலையில் தொண்டர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு அதிமுகவில் சேர்ந்து இருக்கலாமே?.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
31-மே-202117:45:16 IST Report Abuse
siriyaar மன்னார்குடி மாபியா திமுகவை ஜெயிக்கவைத்து இவர்கள் சாராய பேக்டரிகள் மற்றும் அவர்கள் பக்டரிகள் வழக்கம்போல் இயங்க செய்து விட்டனர். இனி இவர்கள் செயல் எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி கூட்டு கொள்ளையை நிறந்தரமாக்குவதுதான். இதற்கு மோடி தடையாக இருப்பதால் தான் இத்தனை பிரச்சினை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X