அமைச்சரவையில் வாய்ப்பு

Updated : மே 31, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளது. பல அமைச்சர்களுடைய துறைகள் மாற்றப்படும் என ஒரு பக்கம் செய்திகள் அடிபட்டாலும், இன்னொரு பக்கம் வேறொரு விஷயமும் பேசப்படுகிறது.மத்திய அமைச்சரவையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள கட்சியையும் சேர்த்துக் கொள்ள பிரதமர் விரும்புகிறார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் கட்சியையும் அமைச்சரவையில் இணைத்து
டில்லி உஷ்!

விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளது. பல அமைச்சர்களுடைய துறைகள் மாற்றப்படும் என ஒரு பக்கம் செய்திகள் அடிபட்டாலும், இன்னொரு பக்கம் வேறொரு விஷயமும் பேசப்படுகிறது.மத்திய அமைச்சரவையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள கட்சியையும் சேர்த்துக் கொள்ள பிரதமர் விரும்புகிறார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் கட்சியையும் அமைச்சரவையில் இணைத்து கொள்ளவும் ஆசைப்படுகிறாராம் பிரதமர். தமிழகத்தில் கூட்டணி கட்சியான, அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சு நடத்த, பா.ஜ., மேலிட பிரமுகர் ஒருவர், விரைவில் சென்னைக்கு வரலாம்.


பின்னணி என்ன?


தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை விவகாரம், தற்போது தமிழகத்தில் அலசப்பட்டு வருகிறது. அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் நீக்கம் செய்துவிட்டது. ஆனாலும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அந்த பள்ளி மீது சேற்றை வாரி வீசி வருகின்றனர்.இந்த விவகாரம் டில்லி அரசியல் வட்டாரங்களிலும் அலசப்படுகிறது. ஆசிரியர் நீக்கம், கைது என நடவடிக்கைகள் எடுத்த பிறகும், தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக ஆக்கப்படுவதற்கு பின், ஒரு பிரபல அரசியல் பிரமுகர் உள்ளார் என சொல்லப்படுகிறது.அந்த பள்ளியின் மீது ஒரு கண் வைத்துள்ள அந்த பிரமுகர், எப்படியாவது அந்த தனியார் பள்ளியை வாங்கிவிட வேண்டும் என துடிக்கிறாராம். பள்ளியின் பெயரை கெடுத்து, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தி, அதை வாங்கிவிட வேண்டும் என்பதுதான், அந்த பிரமுகரின் நோக்கம் என்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள்.
ஏற்பாடுகள் தயார்முதல்வராக பதவியேற்ற பின், விரைவில் டில்லி வந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார் ஸ்டாலின். இதற்கான ஏற்பாடுகள் டில்லியில் வேகமாக நடக்கின்றன. சமீபத்தில் தமிழகம் வந்த தி.மு.க., - எம்.பி., பாலுவும், இது தொடர்பாக மத்திய அதிகாரிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லமும், முதல்வரின் வருகைக்காக தயார் நிலையில் உள்ளது. டில்லி வரும் முதல்வர், இரண்டு நாட்கள் தங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


எழுதியது யார்?சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பற்றி ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை எழுதியவர், '- அன்புள்ள ஆத்மா' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ராஜிவின் பெருமைகளை பேசும் இந்த கட்டுரையை எழுதியவர் யார் என, கட்சிக்குள் ஒரு பட்டிமன்றமே நடந்தது. கட்டுரையின் நடை ஸ்டைலை வைத்து பார்த்தால், சோனியாவோ அல்லது பிரியங்காவோ நிச்சயமாக எழுதியிருக்க முடியாது என்கின்றனர் காங்கிரசார்.'இந்த கட்டுரையின் ஆசிரியர் ராகுல் என்கின்றனர்' விஷயம் தெரிந்தவர்கள். ராகுலின் கொள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு மற்றும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆகியோர், இப்படி பல கட்டுரைகளை தங்கள் பெயர் போடாமல் பத்திரிகைகளில் எழுதியுள்ளனர். இதை ராகுலும் பின்பற்றுகிறார் என்கின்றனர், கட்சியின் மூத்த தலைவர்கள்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-மே-202115:58:11 IST Report Abuse
Sriram V Hope TN CM will control the person who is trying to convert his dirty money to white by purchasing this school
Rate this:
Ray - Chennai,இந்தியா
05-ஜூன்-202115:41:22 IST Report Abuse
Rayஇனிமே யார் வாங்கினாலும் போணியாகுமாப்பா? அதுகூட தெரியாமே இதென்ன அபிஷ்டு கருத்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X