கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

Updated : மே 31, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு,உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவெக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.,
பிளஸ் 2 , பொதுத்தேர்வு, சுப்ரீம் கோர்ட்,

புதுடில்லி:பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு,உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவெக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு, மே 4ல் துவங்கி, ஜூன் 14 வரை நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா இரண்டாவது அலையால்,இந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.


ஆலோசனை

தேர்வுகளை நடத்துவது குறித்து, மாநில கல்வி அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.அதில் பங்கேற்ற தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள், 'பாதுகாப்பான முறையில் தேர்வுகளை நடத்தலாம்' என, தெரிவித்தன.மாநிலங்களின் பரிந்துரைகளை, மே 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி, மத்திய அரசு கூறியிருந்தது. அதனடிப்படையில் தேர்வுகளை நடத்துவது குறித்து, ஜூன், 1ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ஆகியவை ஆலோசனை நடத்தி
வருகின்றன.வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யலாமா என்பது குறித்து சி.பி.எஸ்.இ., ஆராய்ந்துவருகிறது.'தேர்வை ரத்து செய்யாமல், ஏற்கனவே பரிந்துரைத்தபடி, தேர்வு நேரத்தை குறைத்து, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா' என்பது குறித்தும், சி.பி.எஸ்.இ., ஆலோசித்து வருகிறது.

மாற்று ஏற்பாடாக, 9, 10, பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வுக்கான மதிப்பெண்களை நிர்ணயிக்கலாமா என்ற வாய்ப்பு குறித்தும், அதன் சாதக பாதகங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.


வழக்கு


இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், மாணவர், பெற்றோர், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த மம்தா சர்மா என்ற பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏ.எம். கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்றைக்கு விசாரணையை ஒத்திவைத்தது.


நிலைப்பாடு


இதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், 'அடுத்த இரு தினங்களுக்குள் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது. அதற்காக கால அவகாசம் வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 'மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு மத்திய அரசு கொள்கை ரீதியான முடிவெடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
31-மே-202113:15:29 IST Report Abuse
M  Ramachandran தமிழ் நாட்டுக்கு எதுவும் தேவையில்லை . அல் பாஸ் எல்லோருக்கும் டாக்டர் எஞ்சுநீர் பட்டங்கள் விருப்பியபடி விநியோகம் ஆனால் அதற்குரிய கப்பம் செலுத்த வேண்டும். மஞ்சத்துண்டு ஆரம்ப காலத்தில் ஹிந்தி வேண்டாம் என்று சொல்லி என் சி சி யை ஓளித்தார் ( அதனால் நம் மானவர்கள் ராணுவத்தில் சேரமுடியாமல் அல்லலுற்றது ஆனால் வேறு மாநிலத்திலிருந்து தமிழர்கள் ராணுவத்தில் மேல் நிலையில் தாலமை வஹித்தது உபயம் மஞ்சத்துண்டு.) அது போல்இஙகுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளியில் மட்டும் சி பீ எஸ் சி முறையில் படித்து முனேறலாம் மற்ற பள்ளியில் முன்னேறவிடடாமல். செய்வது. அதற்க்கு இஙகு மதியில்லா அடிமை கூட்டம் ஜால்றா தட்டுவது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
31-மே-202107:54:46 IST Report Abuse
blocked user வீட்டில் காமிரா முன்னிருந்து தேர்வு எழுதியிருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X