அவதி! அரசு மருத்துவமனைகள் அலட்சியத்தால்...... இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்| Dinamalar

தமிழ்நாடு

அவதி! அரசு மருத்துவமனைகள் அலட்சியத்தால்...... இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

Updated : மே 31, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (3)
Share
-சென்னையில் உயிரிழந்தோரின் விபரங்களை, ஒரு மாதமாக மாநகராட்சியிடம் அரசு மருத்துவமனைகள் ஒப்படைக்காததால், இறப்பு சான்றிதழ் பெற முடியாமல், பொதுமக்கள் திண்டாடுகின்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வீட்டில் இறப்போரின் விபரங்களை, மாநகராட்சிக்கு தெரியப்படுத்தி, மயான பூமிகளில் அளிக்கும் சான்றிதழுடன், இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
அவதி! அரசு மருத்துவமனைகள் அலட்சியத்தால்...... இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

-சென்னையில் உயிரிழந்தோரின் விபரங்களை, ஒரு மாதமாக மாநகராட்சியிடம் அரசு மருத்துவமனைகள் ஒப்படைக்காததால், இறப்பு சான்றிதழ் பெற முடியாமல், பொதுமக்கள் திண்டாடுகின்றனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வீட்டில் இறப்போரின் விபரங்களை, மாநகராட்சிக்கு தெரியப்படுத்தி, மயான பூமிகளில் அளிக்கும் சான்றிதழுடன், இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவமனைகளில் இறப்போர் விபரங்களை, அந்தந்த மருத்துவமனைகள், மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும். தவிப்பு அதன்பின், மாநகராட்சி சுகாதார அலுவலரின் -கையொப்பமிட்ட இறப்பு சான்றிதழை, https://www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தோரின் விபரங்களை, அரசு மருத்துவமனைகள், இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கின்றனர். தீர்வுஇது குறித்து மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகள், இறப்பு சான்றிதழ்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் உள்ளன. மருத்துவமனை நிர்வாகங்களிடம் பேச்சு நடத்திய பின், ஏப்., 25ம் தேதி முதல், 28ம் தேதி வரையிலான விபரங்களை பதிவு செய்து, ஏப்., 29ம் தேதி முதல், மே 8ம் தேதி வரையிலான விபரங்களை நேரடியாக அளித்துள்ளனர்.

மருத்துவமனைகள் பதிவேற்றம் செய்தால் தான், எங்களால் சான்றிதழ் வழங்க முடியும். மருத்துவமனைகளிடம் காரணம் கேட்டால், 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளதாக கூறுகின்றன. இதற்கு, சுகாதார துறை அதிகாரிகள் தலையிட்டு, தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X