பொது செய்தி

இந்தியா

'கும்பமேளாவால் கொரோனா பரவியதாக கூறுவது நியாயமற்றது'

Updated : ஜூன் 01, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
டேராடூன்:“கும்பமேளாவால் தான், கொரோனா வைரஸ் வேகமாக பரவியதாக கூறுவது நியாயமற்றது,” என, உத்தரகண்ட் மாநில மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சய் கஞ்சியால் கூறியுள்ளார். உத்தரகண்டில் முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.கொரோனா அச்சம்கடந்த மாதம் கோலாகலமாக துவங்கிய கும்ப மேளா திருவிழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலே முடித்து வைக்கப்பட்டது.
 'கும்பமேளா,கொரோனா,பரவல்,நியாயமற்றது'

டேராடூன்:“கும்பமேளாவால் தான், கொரோனா வைரஸ் வேகமாக பரவியதாக கூறுவது நியாயமற்றது,” என, உத்தரகண்ட் மாநில மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சய் கஞ்சியால் கூறியுள்ளார்.

உத்தரகண்டில் முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.


கொரோனா அச்சம்

கடந்த மாதம் கோலாகலமாக துவங்கிய கும்ப மேளா திருவிழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலே முடித்து வைக்கப்பட்டது. மாநிலத்தில் வைரஸ் வேகமாக பரவியதற்கு கும்ப மேளாவே காரணம் என, பல தரப்பினரும் குற்றம்சாட்டினர்.இந்நிலையில், கும்பமேளாவுக்காக அப்போது நியமிக்கப்பட்ட போலீஸ் ஐ.ஜி., சஞ்சய் கஞ்சியால் கூறியதாவது:

கும்பமேளாவால் தான், கொரோனா வைரஸ் வேகமாக பரவியதாக பலரும் கூறி வருகின்றனர். அவ்வாறு கூறுவது நியாயமற்றது.கும்பமேளா நடந்த ஹரித்துவார் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை, கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளின் தரவுகளை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அதை செய்து பார்த்தால், உண்மையை நம்மால் உணர முடியும்.

இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில், ஹரித்துவார் மாவட்டத்தில், 8.91 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.பாதுகாப்புஅதில், 1,954 பேர் மட்டுமே வைரசால் பாதிக்கப் பட்டனர். இது வெறும் 0.2 சதவீதமே. இதேபோல், அந்த நேரத்தில், கும்பமேளாவுக்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 16 ஆயிரம் போலீசாரில், 88 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது வெறும் 0.5 சதவீதமே. எனவே, வைரஸ் பரவலுக்கு கும்பமேளா காரணம் அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-மே-202118:35:46 IST Report Abuse
தமிழவேல் இவருக்கு ப்ரோமோஷன் உண்டு..
Rate this:
கிச்சாமி - மங்கலம்,இந்தியா
02-ஜூன்-202115:06:09 IST Report Abuse
கிச்சாமிஉண்மையைச் சொன்னவருக்கு ப்ரோமோஷன் என்றால் நல்லதே....
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
31-மே-202114:40:44 IST Report Abuse
Hari கேள்வி கேட்பவன் எப்போதும் பதவில இருக்கும்போது கேட்பதில்லை ,மேலும் பதவி கிடைத்தால் அதும் இல்லை,இப்போது ஆண்டாண்டு காலமாக கடவுள் இல்லைனு சொல்லுவான் ஆனால் யாரும் இருக்குனு வாதிடப்பொறதில்லை ,ஆனால் அவன் இன்னும் மேலேபோய் தரம் தாழ்ந்த பேச்ச்ச்சை பேசுவான் ஆனால் ,நாயன்மார்களின் கதையை சொல்லுவான் ,இவர்களின் பொழப்பிற்கு பணம் எவன் எப்படி கொடுத்தாலும் பெற்றுக்கொண்டு வூளை விடுவான் ,நெற்றியில் விபூதி குங்குமம் இட்டுக்கொண்டு ,ஜக்கிவாசுதேவை தரம் இல்லாமல் பேசுவான் ஆனால் கிருத்துச்சியின் ...இருப்பான்.
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
31-மே-202114:17:30 IST Report Abuse
வந்தியதேவன் இவர் என்ன... கொரோன ஆராய்ச்சி நிபுணரா... இல்ல சயின்டிஸ்ட்டா... ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிக்கு... கொரோனா நோய்க் கிருமி பற்றியும், அதன் பரவல் பற்றியும் என்ன தெரியும்...?
Rate this:
blocked user - blocked,மயோட்
31-மே-202117:52:14 IST Report Abuse
blocked userதிமுக வெற்றியைக்கொண்டாட 67 வாகனங்களில் ஆய்வு என்ற பெயரில் கும்மியடித்ததில் ஏறாளமாக நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X