தமிழ்நாடு

ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்! கார் ஆம்புலன்ஸ் சேவையும் துவக்கம்

Updated : மே 31, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவமனையில், தனியார் பங்களிப்புடன், 100 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை வார்டை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்; கார் ஆம்புலன்ஸ் சேவையும் துவங்கப்பட்டது.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்காக, ஏற்கனவே, 187 ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளது. தேவையை கருத்தில் கொண்டு, இங்கு,
ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்! கார் ஆம்புலன்ஸ் சேவையும் துவக்கம்

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவமனையில், தனியார் பங்களிப்புடன், 100 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை வார்டை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்; கார் ஆம்புலன்ஸ் சேவையும் துவங்கப்பட்டது.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்காக, ஏற்கனவே, 187 ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளது. தேவையை கருத்தில் கொண்டு, இங்கு, எக்ஸ்போர்ட்டர்ஸ் போரம், சாய ஆலை உரிமையாளர் சங்கம், 'கொரோனா பைட்டர்ஸ் குரூப்' இணைந்து, 100 ஆக்சிஜன் படுக்கை வசதியுடனான புதிய வார்டை அமைத்தன. இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, உணவு குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்த ஸ்டாலின், தற்காலிக பணி நியமனம் பெற்ற ஆறு மருத்துவர்கள், நான்கு செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் பயன்பாட்டுக்காக, 20 கார் ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் சேவையை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அமைச்சர்கள் முத்துசாமி, சுப்ரமணியன், சாமிநாதன், கயல்விழி முன்னிலை வகித்தனர். எம்.பி. சுப்பராயன், எம்.எல்.ஏ..க்கள் செல்வராஜ், விஜயகுமார், கலெக்டர் விஜயகார்த்திகேயன் பங்கேற்றனர். அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதல்வர் கோவை புறப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
01-ஜூன்-202107:22:59 IST Report Abuse
ocean இந்த பக்கம் சதா நேரமும் விளம்பர ஆட்சி நடத்தினால் அதன் கட்சியில் புகுந்துள்ள கூட்டம் மறுபக்கம் ஊர் சொத்தை சந்தடி சாக்கில் ஆட்டைய போட்டுக் கொண்டிருக்கும். நடுவில் ஓட்டுப்போட்டவர் நெற்றியில் நாமம் தான் விழும்..
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
01-ஜூன்-202107:10:48 IST Report Abuse
ocean ஆட்சி நிர்வாக ரொட்டீன் மேட்டர்களில் இப்படி எல்லாம் தலையிட்டு விளம்பரம் தேடினால் கண்காணிப்பின்றி விடுபடும் மற்ற நிர்வாகத் தொய்வுகளில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
Rate this:
Cancel
01-ஜூன்-202105:18:12 IST Report Abuse
ஆப்பு அதே பச்சைக் கொடி... ஒரு கொடி வாங்க ஒரு கோடி செலவாயிருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X