பொது செய்தி

இந்தியா

'மருத்துவ விவாதத்துக்கு வர்த்தக சண்டை காரணம்'

Updated : ஜூன் 01, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
இந்துார்:''மருத்துவம் தொடர்பாக, தற்போது நிகழ்ந்து வரும் விவாதத்திற்கு பின், இத்துறைகளை சேர்ந்த பல்வேறு குழுக்களுக்கு இடையே பல காலமாக உள்ள வர்த்தக ரீதியிலான சண்டையே காரணமாக இருக்ககூடும்,'' என, வி.எச்.பி., அமைப்பின் சர்வதேச தலைவர் விஷ்ணு சதாஷிவ் கோக்ஜே தெரிவித்தார்.வி.எச்.பி., எனப்படும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் விஷ்ணு சதாஷிவ் கோக்ஜே,
 மருத்துவம் ,விவாதம், வர்த்தக சண்டை,

இந்துார்:''மருத்துவம் தொடர்பாக, தற்போது நிகழ்ந்து வரும் விவாதத்திற்கு பின், இத்துறைகளை சேர்ந்த பல்வேறு குழுக்களுக்கு இடையே பல காலமாக உள்ள வர்த்தக ரீதியிலான சண்டையே காரணமாக இருக்ககூடும்,'' என, வி.எச்.பி., அமைப்பின் சர்வதேச தலைவர் விஷ்ணு சதாஷிவ் கோக்ஜே தெரிவித்தார்.

வி.எச்.பி., எனப்படும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் விஷ்ணு சதாஷிவ் கோக்ஜே, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:ஆயுர்வேதா மருந்துகளில் பக்கவிளைவுகள் இல்லை. ஆனால், அலோபதி மருந்துகளில் பக்க விளைவுகள் உள்ளன. அவற்றை களைவதில் நிபுணர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் பல ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டு கிடந்ததில், நம் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்தின் மகத்துவத்தை மறந்துவிட்டோம். அதை மீண்டும் நிறுவ முயற்சிக்க வேண்டும்.நோய்களை குணப்படுத்துவதில், ஆயுர்வேத மருந்தின் செயல்திறன் குறித்து, நிறைய ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதா - அலோபதி மருத்துவத்துக்கு இடையே, தற்போது மிகப் பெரிய விவாதம் நடந்து வருகிறது.நம் நாட்டில், அலோபதி மருத்துவம் என்பது மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள விவாதத்தால், தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

அலோபதி மருத்துவத்தினால் வர்த்தக ரீதியாக லாபம் அடையும், மிகப் பெரிய குழுக்கள் உள்ளன. இந்த குழுவினருக்கும், ஆயுர்வேதா மருத்துவ துறையினருக்கும் பல காலமாக சண்டை உள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள விவாதத்திற்கு இதுவே பின்புலமாக இருக்கும் என கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pattusuresh - puducherry,இந்தியா
02-ஜூன்-202112:26:32 IST Report Abuse
Pattusuresh வெள்ளம் டு சித்திட அண்ட் AYURVEDA
Rate this:
Cancel
Pattusuresh - puducherry,இந்தியா
02-ஜூன்-202112:21:20 IST Report Abuse
Pattusuresh வர்ற விட்கிராம் ஆயுர்வேதம் மற்றும் sidda
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
31-மே-202119:10:06 IST Report Abuse
Loganathaiyyan 137.8 கோடி ஜனங்கள் இந்திய திருநாட்டில் இங்கு மருந்து / வாக்சின் விற்பனை செய்வது எளிது அதை தடுக்கின்றது இந்த பி ஜெ பி ஆயுர்வேத ஹோமியோபதி மற்றும் ஹைதராபாதில் உற்பத்தி ஆன கோவாக்சின் மூலமாக இது வெளிநாட்டு மருந்து / வாக்சின் கம்பெனிகளுக்கு அதாவது Pfizer - மருந்து / வாக்சின் உற்பத்தி சீனாவில் பணம் கொடுத்து உதவுவது பில் கேட்ஸ் (சீன - அமெரிக்க டு இந்தியா) அமெரிக்க அப்போ நிச்சயம் (Rs. 3,000 x 40 Crores people atleast =Rs. 1,20,000 Crores and only Central Government has to approve as per Pfizer not State Government??Central Government is not approving using local medicines of Ayurvedic, Homeopathy and Covaksin of Hyderabad) செம ஆதி மங்கு மங்குன்னு எப்படி தாங்கும் இந்த Pfizer. அது தான் இவ்வளவு அயல்நாட்டு மருந்து கம்பெனிகளிடமிருந்து உளறல்கள்????பப்புவுக்கு இவ்வளவு காசு கொடுத்தும் ஒன்றும் நடக்க மாட்டேன் என்கின்றது???பாவம் Pfizer தான் என்ன செய்வது என்று தெரியாமல்???????????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X