பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அவர்கள் விவசாயிகள் அல்ல!

Updated : மே 31, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் ஒட்டு மொத்த நாடே சிக்கித் தவிக்கையில், டில்லியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை கொளுத்தி, விவசாய போராட்டத்தின் ஆறாவது மாதத்தை கொண்டாடிஇருக்கின்றனர்.அவர்களுக்கு
they, are not, farmers, அவர்கள், விவசாயிகள், அல்ல,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:

கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் ஒட்டு மொத்த நாடே சிக்கித் தவிக்கையில், டில்லியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை கொளுத்தி, விவசாய போராட்டத்தின் ஆறாவது மாதத்தை கொண்டாடிஇருக்கின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும், பிரதமர் மோடி எதிர்ப்பாளர்கள், முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளனர். எப்போதும் போலவே, முதல்வர் ஸ்டாலினும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

டில்லியில் போராட்டம் நடத்துவோர், உண்மையிலேயே விவசாயிகள் அல்ல என்பது, முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தெரியும்.விவசாயிகளாக இருந்தால், ஆறு மாதத்திற்கும் மேலாக விவசாயத் தொழிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவரா?ஆறு மாதமாக விவசாயம் செய்யவில்லையென்றால், அவர்கள் குடும்பத்திற்கு யார் கஞ்சி ஊற்றுகின்றனர்?உண்மையான விவசாயி எவ்வளவு மழை பெய்தாலும், வெயில் சுட்டெரித்தாலும், ஒரு நாள் கூட, வயலுக்குப் போய் தன் நிலத்தை பார்க்காமல் இருக்க மாட்டான்.காணி நிலம் இருந்தால் கூட, அதை உழுது பயிரிடுவதில் தான் அவனுக்கு மகிழ்ச்சி. இப்படி ஆறு மாதமாக சும்மா உட்கார்ந்து ரொட்டியும், சப்ஜியும் எந்தவொரு விவசாயியும் சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டான்.


latest tamil news


டில்லியில் போராட்டம் நடத்துவோர், விவசாயிகள் அல்ல; ஒரு கட்சிக்காரர்கள் என்பது தெரிந்ததால் தான், பிரதமர் மோடி, அவர்களை கண்டுகொள்ளாமல் உள்ளார். அவர் நினைத்தால், விவசாயிகளின் போர்வையில் போராட்டம் நடத்தும் சமூக விரோதிகளை, ஒரே நாளில் ஒடுக்கி விட முடியும். இந்த கொரோனா சூழலில், வீண் கலவரத்தை தவிர்க்கவே, பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்.

மேலும், அப்படி நடவடிக்கை எடுத்தால், அது எதிர்க்கட்சிகளுக்கே சாதகமாகி விடும்.முன்னாள் பிரதமர் இந்திரா போன்ற இரும்புப் பெண்மணியாக இருந்திருந்தால், இந்நேரம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பார்.ஆனால் மென்மை போக்கை கையாளும் பிரதமர் மோடி, அது போன்ற கடும் நடவடிக்கையில் இறங்க மாட்டார். அதனால் தான், தவறான விமர்சனங்களையும் அவர் கண்டுகொள்வதில்லை.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aandi - Madurai,இந்தியா
31-மே-202122:14:03 IST Report Abuse
aandi காங்கிரசோட டூல்கிட் வெளியே வந்து பல நாட்கள் ஆகிடுச்சு.
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
31-மே-202122:09:15 IST Report Abuse
Balasubramanian ஒவ்வொருவர் ஆதார் அட்டையும் வாங்கி பார்க்க வேண்டும் விவசாயியாக இருந்தால், மோடியின் ஆண்டுக்கு ரூபாய் 6000 திட்டத்தில் பணம் பெற்று இருப்பார்கள். இவர்கள் மாதம் ரூ 60000 வாங்கி ஜாலி பண்ணும் பேர்வழிகள்
Rate this:
Cancel
kumar g -  ( Posted via: Dinamalar Android App )
31-மே-202121:35:18 IST Report Abuse
kumar g அவர்கள் விவசாயிகள் அல்ல..தமிழகத்தில் இருந்து சென்றுள்ள மாறுவேடமிட்ட தமிழர்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X