பள்ளிகளில் கோடை விடுமுறை முடிவு; புதிய கல்வி ஆண்டு நாளை துவக்கம்

Updated : மே 31, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது.நாடு முழுதும் உள்ள பள்ளிகளில், மத்திய இடைநிலை கல்வி வாரிய மான சி.பி.எஸ்.இ., - இடைநிலை சான்றிதழ் கல்வி அமைப்பான ஐ.சி.எஸ்.இ., ஆகிய பாட திட்டங்களிலும் மற்றும் அந்தந்த மாநில பாட திட்டங்களிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., மற்றும்

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது.latest tamil news


நாடு முழுதும் உள்ள பள்ளிகளில், மத்திய இடைநிலை கல்வி வாரிய மான சி.பி.எஸ்.இ., - இடைநிலை சான்றிதழ் கல்வி அமைப்பான ஐ.சி.எஸ்.இ., ஆகிய பாட திட்டங்களிலும் மற்றும் அந்தந்த மாநில பாட திட்டங்களிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாட திட்டங்களில், ஏப்ரல் மாதம் புதிய கல்வி ஆண்டு துவங்கிவிட்டது. மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படுகின்றன. சுற்றறிக்கைதமிழக பாட திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் தான் கல்வி ஆண்டு துவங்கும்.அதன்படி, இந்த ஆண்டு கொரோனா பிரச்னை இருந்தபோதும், தேர்தலுக்கு முன் பாடங்கள் முடிக்கப்பட்டு விட்டன. மே 1 முதல் கோடை விடுமுறையை பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்தது. புதிய கல்வி ஆண்டுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, மே மாத இறுதியில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என, அப்போது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது.கடந்த ஆண்டில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதும், ஜூன் 1 முதல் ஆன்லைன் வழி பாடங்களை நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி, ஆன்லைன் வகுப்புகள் துவங்கின.


latest tamil news


புதிய கல்வி ஆண்டு நாளை துவங்கும் நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, புதிய கல்வி ஆண்டு குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எந்த தகவலையும் அனுப்பவில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

R. Vidya Sagar - Chennai,இந்தியா
31-மே-202110:57:54 IST Report Abuse
R. Vidya Sagar நகரங்களில் இருக்கும் பள்ளிகள் தவிர மற்றவை எல்லாம் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தள்ளாடுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
31-மே-202109:42:00 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN அப்படியா? கோடை விடுமுறை முடிந்து விட்டதா? யாரும் சொல்லவேயில்லை. குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. பாஸ் ஆன குழந்தைகள் இனிப்பு வழங்கி சந்தோஷத்தை கொண்டாடவில்லை. பெற்றோர் யூனிபார்ம் தைக்க அலையவில்லை. பள்ளிகள் பாட புத்தக மூட்டையை விற்கவில்லை. ஷூ கடைகளில் கூட்டம் இல்லை. குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்ற பெற்றோர் கணவரோடு சண்டையிட்டுக்கொண்டு மூட்டை முடிச்சுகளோடு பஸ் ஸ்டேன்டில் காணவில்லை. காலியாக உள்ள பக்கத்து வீட்டில் புதிய குழைந்தைகள் சத்தம் கேட்கவில்லை. ஸ்டேசனரி கடைகளில் புதிய பேனா ,பென்சில் பாக்ஸ் , வாட்டர் பாட்டில் , வாட்டர் கலர் வாங்க குழந்தைகள் அடம்பிடிப்பதை பார்க்க முடியவில்லை. புதியதாக ஆசிரியர்கள் டூவீலர் வாங்கி பழகுவதை கோடை விடுமுறையில் பார்க்கவில்லை. விதவிதமான ஸ்டிக்கர் பொட்டுகள் பேன்ஸி கைவளையல்கள் பேன்ஸி கடைகளில் வாங்க அலைமோதும் கூட்டம் இல்லை. இவ்வளவும் இல்லை அதற்குள் கோடை விடுமுறை முடிந்தது என்றால் எப்படி? போங்க சார். போரடிக்குது.
Rate this:
murali - Chennai,இந்தியா
31-மே-202112:56:46 IST Report Abuse
muraliநீங்க சொன்னது எல்லாம் சரி , ஒன்றை மட்டும் மறந்து விட்டு விட்டீர்கள், பள்ளிகள் வழக்கம் போல கட்டணம் வாங்குவது, பெற்றோர்கள் கட்டணம் செலுத்த வேலை இல்லாத இந்தநாளிலும் துன்பத்தில் இருப்பதையும்....
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
31-மே-202115:50:12 IST Report Abuse
Davamani Arumuga Gounderஆம் அய்யா ஆனாலும் 2020-21 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு, சீருடைகள், புத்தகம், நோட்டு, சாப்பாட்டுக்கு பதிலாக அரிசி, பருப்பு, முட்டை இவைகள் வாரம் ஒருமுறை சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டன .....
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
31-மே-202108:46:59 IST Report Abuse
Karthikeyan K Y தமிழகம் இன்றைய மாணவ சமுதாயத்தை கருதி, இளைஞர்களின் எதிர்காலத்தை கருதி, எதிர்கால தமிழக ஆற்றல், கல்வி, மருத்துவ, தொழில் நுட்ப , அறிவியல் , விஞ்ஞானம், விவசாயம், கலை , இலக்கியம், பொருளாதாரம், போன்றவற்றை கருத்தில் கொண்டு, புதிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் 80 லக்ஷம் மாணவ மணிகளுக்குமாக ஆதரிக்க வேண்டும். தமிழ்நாடு மட்டும் ஏன் நீட் தேர்வில் பின் தங்கியுள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் திராவிட குடும்பம் கல்வியை ஒழித்து தனது கட்சியினரும் குடும்பமும் மொத்தமாக தமிழக கல்வியை சூறையாட நினைக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X