அரசியல் செய்தி

தமிழ்நாடு

புது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது

Updated : மே 31, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (339+ 9)
Share
Advertisement
தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கவுன்சிலின் 43வது கூட்டத்தில் பங்கெடுத்துப் பேசினார். அடுத்த நாள் ஊடகங்களில், தான் முந்தைய தினம் என்னவெல்லாம் வலியுறுத்தினோம் என்பதை அவரே உணர்ச்சிப் பொங்க, தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார்.அவர் தெரிவித்த கருத்துகளில் உள்ள சாரம் என்ன என்பதைப் பார்த்தால், ஆழமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாமல்,

தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கவுன்சிலின் 43வது கூட்டத்தில் பங்கெடுத்துப் பேசினார். அடுத்த நாள் ஊடகங்களில், தான் முந்தைய தினம் என்னவெல்லாம் வலியுறுத்தினோம் என்பதை அவரே உணர்ச்சிப் பொங்க, தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார்.latest tamil newsஅவர் தெரிவித்த கருத்துகளில் உள்ள சாரம் என்ன என்பதைப் பார்த்தால், ஆழமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தனக்கிருக்கும் அறிவை மட்டுமே பறைசாற்றி, 'முதல்வர் ஸ்டாலினை விட, எனக்கு தான் மூளை அதிகம்' எனக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்பதைத் தவிர, வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை.
ஜி.எஸ்.டி., கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு. மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.ஜி.எஸ்.டி., கவுன்சில் உருவாக்கப்பட்ட வரலாற்றைப் பார்த்தாலே இதற்கு பதில் கிடைக்கும். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தான், ஜி.எஸ்.டி.,க்கு அடித்தளம் இடப்பட்டது.மேற்கு வங்க நிதியமைச்சர் அசிம் தாஸ்குப்தா, கேரள நிதியமைச்சர் கே.எம்.மணி என்று பல மூத்த நிதி அமைச்சர்களின் கைவண்ணத்தில் தான், ஜி.எஸ்.டி., சட்டமும் அதன் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.


latest tamil news


அரசியலமைப்பு 101வது திருத்தச் சட்டம் தான், ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு அங்கீகாரமும் வாக்கும் வழங்குகிறது. மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்குகள் வழங்கப்பட வேண்டும் என்பது, அர்த்தமற்ற வாதம். ஜி.எஸ்.டி.,யைப் பொறுத்தவரை, மாநிலம் என்பது தான் அடிப்படை அலகு. அங்கேதான் நிர்வாக ரீதியாக ஓர் அரசு நடைபெறுகிறது. அதுதான் மாநில அளவிலான வரி விதிப்பு முறையை உருவாக்கவும், நிர்வாகம் செய்யவும் முடியும்.
மாவட்ட அளவிலோ, எம்.பி., தொகுதி அளவிலோ, தனித்தனி அரசாங்கமா நடைபெறுகிறது? வரிவிதிப்பு முறையா இருக்கிறது? இந்த அடிப்படையை, தியாகராஜன் புரிந்து கொள்ளவில்லை.

சிறிய மாநில நிதி அமைச்சரை அதிக நேரமும், பெரிய மாநில நிதி அமைச்சரை குறைந்த நேரமும் பேச அனுமதிக்கின்றனர்.


உண்மை நிலவரம்:


ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், அதற்கான நிகழ்ச்சி நிரலோடு நடத்தப்படுவது. ஒவ்வொரு கூட்டத்திலும் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும், முடிவெடுக்கப்பட வேண்டும் என்பது நிகழ்ச்சி நிரலில் தெளிவாக இருக்கும்.மாநில அமைச்சர்கள் அவற்றைப் பற்றி, தத்தம் கருத்துகளை, ஆலோசனைகளை, மறுப்புகளை, திருத்தங்களைச் சொல்லலாம். இதில் இவர் கூடுதலான நேரம் பேசலாம், மற்றொருவர் குறைவான நேரம் பேசலாம் என்றெல்லாம் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.
சமீபத்திய ஜி.எஸ்.டி., சந்திப்புகள் அனைத்தும், எட்டு மணிநேரம் நடைபெறுகின்றன. இதில் சிறிய மாநிலம், பெரிய மாநிலம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கருத்து இருந்தால், சொல்வதற்கான முழு வாய்ப்பு உள்ள இடம் அது.


latest tamil news
தியாகராஜன்:


தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள், அதிகளவு வரிப்பணத்தை விட்டு தருகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில் விட்டுத் தருவதற்கான பேச்சுக்கே இடம் இல்லை.ஜி.எஸ்.டி., வருவாய் என்பது, உற்பத்தி சார்ந்ததல்ல; அது நுகர்வு சார்ந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் எந்த நாடுகளில் எல்லாம் ஜி.எஸ்.டி., அமலில் உள்ளதோ, அங்கெல்லாம் இதுதான் அடிப்படை. நாம் ஐயாயிரம் கார்களை உற்பத்தி செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஆயிரம் கார்கள் தான், இங்கே தமிழகத்தில் விற்பனை ஆகும். மீதுமுள்ள 4,000 கார்கள், வேறு மாநிலங்களில் விற்பனை ஆகும். ஜி.எஸ்.டி., வரி என்பது, இறுதி விற்பனை நடக்கும் இடத்தில் வசூலிக்கப்படுவது. அதனால் எந்த மாநிலத்தில் நுகர்வு அதிகமாக இருக்கிறதோ, அங்கே வரிப்பணம் அதிகம் கிடைக்கும்.


ஜி.எஸ்.டி., கவுன்சில் 'ரப்பர் ஸ்டாம்ப்'


செயல்படாத ஓர் அமைப்பு, தனிக் கருத்துச் சொல்ல இயலாத அமைப்பை தான், 'ரப்பர் ஸ்டாம்ப்' என்போம். இதுவரை 43 ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்கள் நடந்துள்ளன.பல்வேறு மாநில நிதி அமைச்சர்களும், இதர அமைச்சர்களும் பல்வேறு விஷயங்களில், கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர். அவற்றை கவுன்சில் கணக்கில் எடுத்து, தன் கருத்துகளையும், திசையையும் மாற்றியமைத்து இருக்கிறது.

தியாகராஜன், தன் கருத்துகளை புரட்சிகரமாகச் சொல்கிறோம் என்ற நினைப்பில், இதுநாள் வரை இந்த கவுன்சிலின் மேம்பாட்டுக்காக போராடி வந்துள்ள அத்தனை மாநில நிதி அமைச்சர்களின் பங்களிப்பையும், ஒற்றை வார்த்தையில் மறுதலித்து விட்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது.இந்த 43வது கூட்டத்திலேயே, நம் நிதியமைச்சரது தகவல் போதாத தன்மையை, கோவா மாநில பிரதிநிதியான மவின் காடின்ஹோ, 'டிவிட்டரில்' கடுமையாக விமர்சித்துள்ளார்.
சின்ன மாநிலம் என்ற காரணத்தால், கோவாவின் கருத்துகளை எடுத்து வைக்க விடாமல் தடுத்தார் என்று தெரிவித்துள்ளார் மவின் காடின்ஹோ.'புது காபியின் புது மணம் அதிக நேரம் நீடிக்காது; அந்த மணத்தைப் போன்ற தன்மையுடன் இருந்தால், வெகு சீக்கிரத்தில் மவுசு இழக்க நேரிடும்' என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (339+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
31-மே-202123:54:01 IST Report Abuse
unmaitamil எங்கு உற்பத்தி செய்தாலும், எந்த மாநிலத்தில் பொருள் விற்கப்படுகிறதோ அந்த மாநிலஅரசிற்கு 50% ம் , மத்திய அரசுக்கு 50%ம் GST. வரியாக கிடைக்கும் . எவ்வளவு விற்பனையோ அதற்க்கு தகுந்தால்போல் அந்த மாநிலத்துக்கு வரி கிடைக்கும். இதனால் எந்த மாநிலமும் மற்ற மாநிலத்திற்கு பகிந்து கொடுப்பதில்லை . இந்த அடிப்படை அறிவும், தகவலும் அறியாமல் உலரும் இவரா திறமையான நிதி அமைச்சர் . தமிழ்நாட்டு மானமே கப்பல் ஏறி நாறுகிறது. இவர், அதிகம் படிக்காத தர்மோகோல் ராஜுவை மிஞ்சிவிட்டார் . இந்த கூமுட்டையை அறிவாளி என போற்றும் திருட்டு டூமில்ஸ் .
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
31-மே-202123:49:47 IST Report Abuse
Tamil மக்கள் செலவு செய்யும் இடங்களில் தானே வரி ஈட்ட முடியும். அரசுக்கு வரிவருவாய் இல்லை என்றல் எப்படிசெயல்படும். கறுப்புப்பணம் ஈட்டும் மாநிலத்தில்.மற்றும் வேலைவாய்ப்பு குறைந்த மாநிலங்களில் வரி வருவாய் இருக்காது. அதற்காக வரிவருமானம்இருக்கும் மாநிலங்களில் இருந்து கறுப்புப்பணம் அதிகமா புழங்கும் வடஇந்தியவில் கொடுத்தால் OPS போல கும்பிடு குருசாமி இருந்தால் விளங்குமா ? உன் மாநில வருவாய் உயர்த்தாமல் வரிவருவாய் அதிகம் இருக்கும் இடத்தில எடுத்து கொடுத்தாலும் அவர்கள் முன்னேறப்போவதில்லை. லோன் எடுத்து வெளிநாட்டுக்கு ஓடிப்போன நபர்களால் திவால் ஆகும் நிலையில் இருந்த வங்கிகளை லாபம் வரும் வங்கியுடன் இணைத்தல் அதும் நஷ்டம் முடியுமே தவிரலாபம் வராது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு லாபம் கொடுத்த இந்தியன்ஏர்லைன்ஸ் நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியவுடன் sernthathum உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணா கதை , சீனா போட்டியாக பொருளாதாரம் வளரவேண்டும் என்றால் ஒரு ஒரு மாநிலமும் அவர்களுக்கு தேவையான வருவாய் பெருகாமல் பிச்சை எடுத்தால் வரும்காலத்தில் இந்திய பொருளாதார வலிமை குறையும்.
Rate this:
Cancel
Ram Sethuraman - Mississauga, Canada,கனடா
31-மே-202122:50:56 IST Report Abuse
Ram Sethuraman இவர் சொல்ற நல்ல விஷயங்களை எடுத்து கொள்ள வேண்டும். இவர் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X