புதிய பார்லி., கட்டடம்; தடைவிதிக்க கோரியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Updated : மே 31, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய பார்லி., கட்டடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மனுவை தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியால் சென்ட்ரல் விஸ்டா திட்டம் டில்லியில் 86 ஏக்கரில் துவங்கப்பட்டது.
Central Vista, Delhi, HC, Penalty, Petitioner, டில்லி, உயர்நீதிமன்றம், சென்ட்ரல் விஸ்டா, அபராதம்

புதுடில்லி: டில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய பார்லி., கட்டடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மனுவை தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியால் சென்ட்ரல் விஸ்டா திட்டம் டில்லியில் 86 ஏக்கரில் துவங்கப்பட்டது. புதிய பார்லிமெண்ட், ராஜபாதை, மத்திய அரசு அலுவலக ங்கள், பிரதமர் அலுவலகம், இல்லம், சிறப்பு பாதுகாப்புப்படை அலுவலகம், ஜனாதிபதி இல்லம் உள்ளிட்ட பல கட்டடங்கள் இதில் அடங்கியுள்ளன. டில்லியில் கோவிட் 2வது அலை உச்சக்கட்டத்தை எட்டியபோது, டில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் டில்லியில் அனைத்து கட்டுமானப்பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டது. அதை மேற்கோள்காட்டி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்தவும் உத்தரவிடக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news



இந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திருபாய் நிரன்பாய் படேல் தலைமையிலான அமர்வு இன்று (மே 31) தீர்ப்பு வழங்கியது. அதில், சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது. மேலும், மனுவை தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Believe in one and only God - chennai,இந்தியா
01-ஜூன்-202102:31:47 IST Report Abuse
Believe in one and only God இத்தகைய அடக்கு முறை சரி இல்லை.
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
01-ஜூன்-202100:29:19 IST Report Abuse
Venkataramanan Thiru மனுவை தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இதற்கு முன்மாதிரி உள்ளதா ?
Rate this:
Cancel
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
01-ஜூன்-202100:14:03 IST Report Abuse
PalaniKuppuswamy Tool kit வைத்து .. திரு மோடி அவர்களை கேவல படுத்த நினைக்கும் ..தீவிரவாத கூட்டம் பின்புலம் ..அதையும் சிறையில் தேச துரோக வழக்கில் உள்ளே தள்ள வேண்டும். இப்படி பட்ட தேச துரோகிகளின் ஓட்டு போடும் உரிமையை பிடுங்க வேண்டும்.தேசத்திற்கு எதிராக செயல் படும் இவர்கள் நாட்டிற்கில் இருக்க தகுதி இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X