பொது செய்தி

இந்தியா

கோவிட் செயற்கையாக உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: நிபுணர்

Updated : மே 31, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் வைரஸ் செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று முன்னாள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நிபுணர் டாக்டர்.ராமன் ஆர் கங்கேத்கர் தெரிவித்துள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கோவிட்-19 வைரஸ், உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான உயிர்களை
Covid19, BeingArtificially, NoProof, Created, Lab, ExICMR, Official, கொரோனா, கோவிட், வைரஸ், செயற்கை, ஐசிஎம்ஆர்

புதுடில்லி: கோவிட் வைரஸ் செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று முன்னாள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நிபுணர் டாக்டர்.ராமன் ஆர் கங்கேத்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கோவிட்-19 வைரஸ், உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான உயிர்களை கொன்ற கொடிய வைரஸ், வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என அமெரிக்கா தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. இதனைத்தொடர்ந்து பல நாடுகளும் சீனாவின் மீது பழிசுமத்தின. உலக சுகாதார அமைப்பும் சீனாவில் ஆய்வு மேற்கொண்டதில், இது செயற்கையாக உருவாக்கியதற்கான சான்றுகள் இல்லை எனக்கூறியது.


latest tamil news



இது தொடர்பாக முன்னாள் ஐ.சி.எம்.ஆர் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ராமன் ஆர் கங்கேத்கர் கூறுகையில், ‛கோவிட்-19 செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது விலங்குவழியாக பரவியது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. கோவிட் வைரஸின் தோற்றம் பற்றி இறுதியான முடிவுக்கு வர கூடுதல் சான்றுகள் தேவை,' எனக் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூன்-202108:29:51 IST Report Abuse
Ramesh ஒரு சம்பவம் நிகழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என்பதே, அந்தச் சம்பவமே நிகழவில்லை என்பதற்கான ஆதாரமாகி விடாது. பாதிப்பும் கொந்தளிப்பும் தவிப்பும் மிகுந்திருக்கிற சூழலில் தனிநபர்கள் தேவையற்ற கருத்துகளை கூறாமல் மௌனம் காப்பது நலம்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
01-ஜூன்-202100:13:45 IST Report Abuse
unmaitamil உன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. பதவியிலும் இல்லை. யாராவது காசுகொடுத்தா உடனே உளறாதே . இனிவாழப்போகும் காலமோ குறைவு. அதனால் உனக்கு இப்போது ஓய்வுஊதியம் தரும் தாய்நாட்டுக்கு, தாய் மண்ணுக்கு உண்மையாக இரு , பேசு .
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
31-மே-202121:19:14 IST Report Abuse
SUBBU ICMR Retired கிழங்களையெல்லாம் கொரானா எங்கு உருவானது என்பதை பற்றியெல்லாம் கருத்து தெரிவிக்க மத்திய அரசு அனுமதிக்க கூடாது.பென்ஷன வாங்கிகிட்டு சும்மா வீட்ல கெடக்காம இதையெல்லாம் கருத்தை சொல்லச் சொல்லி யார் இப்ப அழுதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X