கோவிட் செயற்கையாக உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: நிபுணர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோவிட் செயற்கையாக உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: நிபுணர்

Updated : மே 31, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (39)
Share
புதுடில்லி: கோவிட் வைரஸ் செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று முன்னாள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நிபுணர் டாக்டர்.ராமன் ஆர் கங்கேத்கர் தெரிவித்துள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கோவிட்-19 வைரஸ், உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான உயிர்களை
Covid19, BeingArtificially, NoProof, Created, Lab, ExICMR, Official, கொரோனா, கோவிட், வைரஸ், செயற்கை, ஐசிஎம்ஆர்

புதுடில்லி: கோவிட் வைரஸ் செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று முன்னாள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நிபுணர் டாக்டர்.ராமன் ஆர் கங்கேத்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கோவிட்-19 வைரஸ், உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான உயிர்களை கொன்ற கொடிய வைரஸ், வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என அமெரிக்கா தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. இதனைத்தொடர்ந்து பல நாடுகளும் சீனாவின் மீது பழிசுமத்தின. உலக சுகாதார அமைப்பும் சீனாவில் ஆய்வு மேற்கொண்டதில், இது செயற்கையாக உருவாக்கியதற்கான சான்றுகள் இல்லை எனக்கூறியது.


latest tamil news



இது தொடர்பாக முன்னாள் ஐ.சி.எம்.ஆர் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ராமன் ஆர் கங்கேத்கர் கூறுகையில், ‛கோவிட்-19 செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது விலங்குவழியாக பரவியது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. கோவிட் வைரஸின் தோற்றம் பற்றி இறுதியான முடிவுக்கு வர கூடுதல் சான்றுகள் தேவை,' எனக் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X