மே.வங்க தலைமை செயலர் ஓய்வு; மம்தாவின் தலைமை ஆலோசகராக நியமனம்

Updated : மே 31, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.'யாஸ்' புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டத்திற்கு
West Bengal, Chief Secretary, Retires, Appointed, CM, Mamata, Adviser

கோல்கட்டா: மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

'யாஸ்' புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டத்திற்கு மே.வங்க முதல்வர் மம்தா, அரைமணி நேரம் தாமதமாக வந்தார். அவருக்காக பிரதமர் மோடி மற்றும் கவர்னர் ஜெகதீப் தன்கர் அரைமணி நேரம் காத்திருந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதையடுத்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலர் அலபன் பண்டாபாத்யாயாவை திரும்பபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. தலைமைச் செயலரை உடனடியாக பணியாளர் பயற்சி துறைக்கு மே 31ம் தேதிக்குள் (இன்று) அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டது.


latest tamil newsஇதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மம்தா, இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‛மேற்குவங்கம் கோவிட்டுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மேற்குவங்க தலைமைச் செயலரை டில்லிக்கு அழைக்கும் செயல் ஏற்க முடியாதது. தயவு செய்து தலைமை செயலரை திரும்ப பெறும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,' என எழுதியிருந்தார். இந்நிலையில், தலைமை செயலர் அலபன் பண்டாபாத்யாயா தன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து, தனது தலைமை ஆலோசகராக அவர் நியமிக்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும், மேற்குவங்கத்திற்கு எச்.கே.திவேதி புதிய தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
31-மே-202121:53:07 IST Report Abuse
chennai sivakumar Actually he is retiring and extension for 3 months given by central govt. Now the question is how can he retire without getting released from Central govt? Secondly he cannot retire in State govt. The only option is to resign and that also need to be accepted by the Central govt. அவருக்கு போதாத நேரம். கடைசியில ஒரு பணமும் வராது. Advisor velsiyum காலி ஆகி விடும். Wait and see
Rate this:
Cancel
31-மே-202121:50:31 IST Report Abuse
sakthi shanmugam ஆணவத்தின் மொத்த உருவம்
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
31-மே-202121:27:58 IST Report Abuse
SUBBU மம்தாவின் கொடூரமான அட்டூழிய ஆட்டத்திற்கு முடிவு வெகு விரைவில்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X