தடுப்பூசி கொள்கை: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : ஜூன் 02, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, 'கோ - வின்' இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்வது தொடர்பான வழக்கில், 'கள நிலவரங்களை அறிந்து கொள்கைகளை வகுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.கொரோனா தொற்று பரவல் நிலவரம் குறித்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட்,
தடுப்பூசி கொள்கை: அரசு, சுப்ரீம் கோர்ட்,

புதுடில்லி :கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, 'கோ - வின்' இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்வது தொடர்பான வழக்கில், 'கள நிலவரங்களை அறிந்து கொள்கைகளை வகுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொரோனா தொற்று பரவல் நிலவரம் குறித்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.என்.ராவ்,
எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பத்த உத்தரவு:கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, கோ - வின் இணையதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு கூறுகிறது.
கிராமங்களில் வசிப்பவர்கள் எப்படி முன் பதிவு செய்து கொள்வர். 'டிஜிட்டல் இந்தியா'வில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அரசு எவ்வாறு கையாளப் போகிறது. கொள்கைகளை வகுப்பவர்கள் கள நிலவரத்தை அறிந்து செயல்பட வேண்டும்.பஞ்சாப், டில்லி போன்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி கொள்முதல் செய்ய, ஒப்பந்த புள்ளி அளித்துள்ளன.

மும்பை மாநகராட்சி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த புள்ளி பெற்றுள்ளது. தடுப்பூசி கொள்முதல் விவகாரத்தில், மத்திய அரசின் கொள்கை என்ன?
மாநில அரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டுமா அல்லது மத்திய அரசு கொள்முதல் செய்து வினியோகிக்குமா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


என்.ஆர்.ஐ., தடுப்பூசிநீதிமன்றம் அதிரடி!கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது, வெளிநாட்டில் வேலை செய்து வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அங்கு படித்து வந்த மாணவர்கள் நாடு திரும்பினர்.
இவர்கள் தற்போது மீண்டும் வெளிநாடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே, தடுப்பூசி போடுவதில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனம் பொது நல மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை, சட்ட திட்டங்களின் அடிப்படையில் விரைவில் முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gayathri - coimbatore,இந்தியா
02-ஜூன்-202112:19:44 IST Report Abuse
gayathri மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது என்கிற எண்ணம், தனக்கு மட்டுமே தெரியும் என்கிற எண்ணத்தில்நிறைய கருத்துக்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-ஜூன்-202118:01:14 IST Report Abuse
sankaseshan Who is bell the cat SC to expedite lacks of pig cases Advices for others not for them
Rate this:
Cancel
Uthiran - chennai,இந்தியா
01-ஜூன்-202114:31:02 IST Report Abuse
Uthiran அரசு நிர்வாகத்தில் நீதி அமைப்பு தேவையில்லாமல் மூக்கை நுழைத்தால் அரசு நிர்வாகமும் நீதி அமைப்பில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க முடியாது. தன்னாட்சி பெற்ற அமைப்பு தனது எல்லையை தெளிவாக புரிந்து கொண்டு அதன் படி வாய்ச்சவடால் செய்வது நல்லது..
Rate this:
rajan - erode,இந்தியா
01-ஜூன்-202118:04:35 IST Report Abuse
rajanமோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீதி துறைக்குள் மூக்கை நீட்டி கொண்டுதான் இருக்கிறார் = தலைமை நீதிபதிகளை ரகசிய வழிகளில் கட்டுப்படுத்தி பதவி கொடுத்து (லஞ்சம் கொடுத்து) கொண்டிருப்பது மோடி அரசு மட்டுமே. மத்திய தணிக்கை, மத்திய புலனாய்வு, வரித்துறை, தேர்தல் கமிஷன் என்று எல்லா துறைகளையும் தன கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நாட்டை கீழ் நிலைக்கு கொண்டு போவது மோடி மட்டுமே = கருப்பு பணத்தை இந்தியாவிலிருந்து ஒழிப்பேன் என்று சொல்லி, இப்போது பிஜேபி கட்சியிடம் மட்டுமே கருப்பு பணம் வைத்திருப்பது மோடி...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-ஜூன்-202119:51:30 IST Report Abuse
தமிழவேல் RBI ஐ விட்டுட்டிய்ங்க ராஜன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X