விதிகளுக்கு கட்டுப்படுங்கள் 'டுவிட்டருக்கு' உத்தரவு

Updated : ஜூன் 02, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :'மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளுக்கு, 'டுவிட்டர்' நிர்வாகம் இணங்கி நடக்க வேண்டியது அவசியம்' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்களில், நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்களும், வெறுப்புணர்வை துாண்டும் பொய்யான பிரசாரங்களும் பரப்பப்பட்டு
விதிகள்,  கட்டுப்படுங்கள்' டுவிட்டர், உத்தரவு

புதுடில்லி :'மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளுக்கு, 'டுவிட்டர்' நிர்வாகம் இணங்கி நடக்க வேண்டியது அவசியம்' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்களில், நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்களும், வெறுப்புணர்வை துாண்டும் பொய்யான பிரசாரங்களும் பரப்பப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.


மனு தாக்கல்



இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு அறிவித்தது. புதிய டிஜிட்டல் கொள்கையாக வகுக்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை விதிகள், மே, 25 முதல் அமலுக்கு வந்தன.
சமூக ஊடக நிறுவனங்கள், தங்கள் பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, சிறப்பு குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல புதிய விதிகள், இதில் இடம்பிடித்துள்ளன.புதிய விதிகளுக்கு உட்பட்டு, டுவிட்டர் நிர்வாகம், குறைதீர் அதிகாரியை இதுவரை நியமிக்கவில்லை என்றும், காலம் தாழ்த்தாமல் அந்த அதிகாரியை உடனடியாக நியமிக்க உத்தரவிடக்கோரியும், டில்லி உயர் நீதிமன்றத்தில் அமித் ஆச்சார்யா என்ற வழக்கறிஞர், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


அவசியம்



இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளுக்கு, டுவிட்டர் நிர்வாகம் இணங்கி நடக்க வேண்டியது அவசியம்,'' என, உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த மனு குறித்து பதிலளிக்கக்கோரி, மத்திய அரசுக்கும், டுவிட்டர் நிர்வாகத்திற்கும் 'நோட்டீஸ்' அனுப்பி, உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANIAN K - Dubai ,இந்தியா
01-ஜூன்-202110:29:38 IST Report Abuse
MANIAN K காசுக்காக விலை போன நிறைய ஊடகங்கள் போல இவையும் காசு, சர்ச்சை இவற்றால் அடிமை ஆனவர்கள் Twitter etc
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
01-ஜூன்-202107:59:40 IST Report Abuse
blocked user டிவிட்டர் கணக்குக்களை உண்மையான ஆதர் எண்களுடன் இணைக்கவேண்டும். இல்லை என்றால் இவர்களால் ஓவராக ஆட முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X