பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு குறைந்தது

Updated : ஜூன் 02, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை :''தமிழகத்தில், இரண்டு நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதால், 6ம் தேதிக்கு பின்னரே தடுப்பூசி போடப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை, சைதாப்பேட்டையில், அன்னை வேளாங்கண்ணி கலை கல்லுாரியில், 120 படுக்கைகளுடன் கூடிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ, கொரோனா சிகிச்சை மையத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை
தமிழகம், தடுப்பூசி கையிருப்பு, 6ம் தேதி,அறிவிப்பு

சென்னை :''தமிழகத்தில், இரண்டு நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதால், 6ம் தேதிக்கு பின்னரே தடுப்பூசி போடப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, சைதாப்பேட்டையில், அன்னை வேளாங்கண்ணி கலை கல்லுாரியில், 120 படுக்கைகளுடன் கூடிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ, கொரோனா சிகிச்சை மையத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று துவக்கி வைத்தார்.பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 10 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது, சைதாப்பேட்டையில், 11வது சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.


வரவேற்புமுதல்வர் அறிவுறுத்தல்படி, மூன்று வாரத்தில், மாநிலம் முழுதும், 50 இடங்களில், சித்தா சிகிச்சை மையம்; ஒரு இடத்தில் ஆயுர்வேதா; 11 இடங்களில் யோக மையங்கள் துவக்கப்பட்டு, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட, குணம்அடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைப் போல, கோவை, திருப்பூரிலும், 'கார் ஆம்புலன்ஸ்' சேவை செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 504 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை, அமைச்சர் சுப்பிரமணியன், பயன்பாட்டுக்குக்கு நேற்று திறந்து வைத்தார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:தமிழகத்துக்கு, 83 லட்சம் தடுப்பூசிகள், மத்திய அரசிடமிருந்து கிடைத்துள்ளன. மேலும், 18 வயது முதல், 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, 13 லட்சம் தடுப்பூசிகள் என, 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 87 சதவீத தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.


10 கோடி தடுப்பூசிகள்முதல் அலையின் போது, 3 சதவீத தடுப்பூசிகள் வீணாகின. தற்போது, ஐந்து லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இவை, இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானது. செங்கல்பட்டில் செயல்படாமல் இருக்கும் நிறுவனத்தில், தடுப்பூசி தயாரிக்கும் பணியை, தமிழக அரசு ஏற்று நடத்துவதா, மத்திய அரசு நடத்துவதா என்பது, ஒரு வாரத்தில் தெரிய வரும்.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் செயல்பாட்டிற்கு வந்தால், 10 கோடி தடுப்பூசிகள் வரை தயாரித்து, மற்ற மாநிலங்களுக்கும் வழங்கும் நிலை ஏற்படும். இறப்பு எண்ணிக்கையை மறைப்பதில், எந்த பயனும் இல்லை. உண்மையான இறப்பை மக்களிடத்தில் தெரியப்படுத்தினால் தான், மக்களுக்கு பயம் கலந்த விழிப்புணர்வு ஏற்படும். அதனால், கொரோனாவால் நிகழும் இறப்பை மறைக்கக்கூடாது என, அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


'3ம் தேதிக்கு மேல் தடுப்பூசி கிடையாது!'மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு மே மாதம், 20.4 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன. அதில், இதுவரை 18.67 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. மீதமுள்ள 1.8 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசிடம் நடத்திய பேச்சை தொடர்ந்து, ஜூன் மாதம், 42.8 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வதாக
உறுதியளித்துள்ளது. இவை, மே மாதத்தை விட இரண்டு மடங்கு அதிகம். ஆனால், ஒரே நேரத்தில் தமிழகத்திற்கு தடுப்பூசி கிடைக்காது.

வரும், 6ம் தேதி தான், முதற்கட்டமாக 3.5 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 9ம் தேதி என, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக, அம்மாதத்திற்கான தொகுப்பில் இருந்து தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.தற்போது, 4.93 லட்சம் தடுப்பூசிகள் தான் கையிருப்பில் உள்ளன. அதில், நேற்று ஒரே நாளில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன. அதனால், ஒரு சில மையங்களில் அடுத்தடுத்து, தடுப்பூசி இல்லாத நிலை ஏற்படும். அதிகபட்சமாக, நாளை மற்றும் நாளை மறுதினம் வரை, சில மையங்களில் தடுப்பூசி போடப்படும்.

கையிருப்பில் உள்ள, அனைத்து தடுப்பூசிகளையும் முழுமையாக பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். எனவே, 3ம் தேதிக்கு பின், 6ம் தேதி வரை தடுப்பூசி போட முடியாது. மத்திய அரசு தொகுப்பில் இருந்து, 6ம் தேதி தடுப்பூசி வந்த பிறகே போடப்படும். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்படாது. சென்னை, கோவையில் தொற்று குறைந்து வந்தாலும், ஈரோடு, நாகை, ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில், அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
02-ஜூன்-202101:00:35 IST Report Abuse
Mohan இப்படி பதுக்கினா கையிருப்பு குறையத்தான் செய்யும். வங்கி இருப்புத்தான் எகிறும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
01-ஜூன்-202114:42:09 IST Report Abuse
RajanRajan திராவிட மன்னர்மன்னர்களே முதலில் மத்திய அரசிடம் இருந்து எத்தனை இலவச தடுப்பூசிகள் வாங்கினீர்கள் அதில் எத்தனை வேஸ்ட் ஆனது? அடுத்து மாநில திராவிட அரசு நேரடியாக 25 % கணக்கில் எத்தனை தடுப்பூசிகள் வாங்கினீர்கள் அதில் எத்தனை வேஸ்ட் பண்ணினீங்க.? அடுத்து தனியார் 25 % கணக்கில் எத்தனை தடுப்பூசிகள் வாங்கினீர்கள் அதில் எத்தனை வேஸ்ட்? எனும் கணக்குகளை விவரமாய் வெளிப்படையாய் தெரிவியுங்கள். நீங்க ஊசிமருந்து இல்லேங்கிறீங்க, அங்கே முன்கள பணியாளர்கள் முறையே 500 - 800 ரூபாய் லஞ்சம் வாங்கி ஊசி போட்டு விட்டுருக்காங்களே. அது எப்படி?? ஒரு வேலை வேஸ்ட் கணக்கில் தடுப்பூசி எண்ணிக்கையை காட்டி லஞ்சம் வாங்கி ஊசி போடுறாங்களோ. எந்த ஒரு உயிர் போகிற நிலையிலும் கூட லஞ்சம் வாங்காம இந்த தடுப்பூசி போடுற திட்டத்தை கூட நிறைவேற்ற திணறும் திராவிட தயிர் வடை ஆட்சி இனி தேவையா என எண்ண தோன்றுகிறது.
Rate this:
rajan - erode,இந்தியா
01-ஜூன்-202118:07:36 IST Report Abuse
rajanமத்திய அரசு இன்னும், எந்த மாநிலத்திற்கு எவ்வளவு தடுப்பூசி விநியோகம் செய்தனர் என்பதை விவரமாக தெரிவிக்கவில்லையே - அதை கேட்டு ராஜன்ராஜன் அவர்கள் பதில் சொல்வாரா...
Rate this:
Cancel
Chandramouli - Mumbai,இந்தியா
01-ஜூன்-202112:43:10 IST Report Abuse
Chandramouli Economic Times 30 மே மாதம் மும்பை பத்திரிகை செய்தி தமிழகத்தில் 955000 கையிருப்பில் உள்ளது என்று. தினமும் 1 லட்சம் அளவிற்கு தடுப்பூசி . என்றால் இன்றைய கணக்கு எங்கையோ இடிக்கிறது . தமிழக அரசும் , ராதாகிருஷ்ணனும் எதையோ மறைக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X