அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் நுழைய முடியாது சசிகலாவுக்கு 'மாஜி' எச்சரிக்கை

Updated : ஜூன் 02, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
கிருஷ்ணகிரி :''எந்தச் சூழ்நிலையிலும், சசிகலா அ.தி.மு.க.,வில் நுழைய முடியாது,'' என, கே.பி.முனுசாமி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,விற்கும், சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. சசிகலா, அ.தி.மு.க.,வில் இல்லை. எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இயக்கத்தில்
அ.தி.மு.க., நுழைய, சசிகலா,மாஜி எச்சரிக்கை

கிருஷ்ணகிரி :''எந்தச் சூழ்நிலையிலும், சசிகலா அ.தி.மு.க.,வில் நுழைய முடியாது,'' என, கே.பி.முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க.,விற்கும், சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. சசிகலா, அ.தி.மு.க.,வில் இல்லை. எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இயக்கத்தில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என, ஒரு சிலர் இந்த அம்மையாரை முன்னிறுத்தி, இதுபோன்ற கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.இவர்கள் ஏற்படுத்தும் குழப்பத்திற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் செவி சாய்க்க மாட்டார்கள். எந்த தொண்டனும், இந்த அம்மையாரிடத்தில் பேசவில்லை. மாறாக இந்த அம்மையார் தான், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிஇருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா கட்டிக்காத்த இயக்கத்தில், இவர்கள் ஒண்டி வந்து ஆதாயம் தேடியவர்கள். இன்னும் அந்த ஆதாயம் கிடைக்கிறதா என்று, அதிகார போதைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். இனி, அவர்களுக்கு அந்த வாய்ப்பே இருக்காது. அ.தி.மு.க.,வில், இ.பி.எஸ்.,சுக்கும், ஓ.பி.எஸ்.,சுக்கும் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. இதுபோன்ற கருத்துகளை உருவாக்கி, அதிலே குளிர் காயலாம் என்று சில பச்சோந்திகள், சந்தர்ப்பவாதிகள் முயற்சி செய்கின்றனர். அதற்கு இந்த அம்மையார் இரையாகி விடக்கூடாது என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kurinjikilan - Madurai,இந்தியா
01-ஜூன்-202119:53:14 IST Report Abuse
kurinjikilan பெரும் பேராசை பிடித்த ஆனால் செல்லாக்காசுகளான இவரையும் வைத்திய லிங்கத்தையும் கட்சியைவிட்டு நீக்கினால் தான் அதிமுக உருப்படும்..
Rate this:
Cancel
Muthiah.G - Tamil Nadu,இந்தியா
01-ஜூன்-202118:14:12 IST Report Abuse
Muthiah.G அதிமுக வை கடுப்பேத்திராங்க,வெறுப்பேத்திராங்க மை லாட்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
01-ஜூன்-202117:35:11 IST Report Abuse
பாமரன் ஆக்சுவலா அவர் சொன்னது என்னன்னா சின் அம்மே கட்சியில் சேர்ந்து நிறைய சம்பாதிச்சுச்சு அப்பிடின்னு... தனி ஆவர்த்தனம் பண்ணிக்கிட்டு இருக்கும் ஜெ நியுசில் கூட தெளிவா வந்தது... அதாவது அதிமுக கம்பெனி என்பதை பயன்படுத்தி எண்டே அம்மேவோட சேர்ந்து கொள்ளையடிச்சதா கிளியரா சொன்னாப்ல... ஆனால் பாருங்க மக்களே செலக்டிவ் ஜர்னலிசத்தில் அடிபட்டுப்போச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X