பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் சிறப்பு சிகிச்சை மையம் துவக்கி வைத்தார் ஸ்டாலின்

Updated : ஜூன் 02, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் படுக்கை வசதி உடைய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் உள்ள டி.என்.பி.எல்., டவுன்ஷிப் பகுதி சமுதாயக் கூடத்தில், 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை
 கரூர், சிறப்பு சிகிச்சை மையம், ஸ்டாலின்

சென்னை:தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் படுக்கை வசதி உடைய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் உள்ள டி.என்.பி.எல்., டவுன்ஷிப் பகுதி சமுதாயக் கூடத்தில், 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது.அவற்றில், 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையவை. இந்த சிகிச்சை மையத்திற்கு தேவையான மின்சாரம், குடிநீர் வசதி, மருத்துவ பணியாளர்களுக்கான அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க 1 கோடி ரூபாய் செலவில், உபகரணங்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் உள்ள மருத்துவ மனைகளுக்கும், ஆக்சிஜனை சிலிண்டர்களில் நிரப்பி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலர் இறையன்பு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் ராஜிவ்ரஞ்சன், எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
02-ஜூன்-202100:17:29 IST Report Abuse
Mohan உபகரணங்கள் ஒரு கோடிக்கு இத்தாலியிலிருந்து இறக்குமதியாம். யாருக்கு உபகாரங்கள்.
Rate this:
Cancel
01-ஜூன்-202115:53:40 IST Report Abuse
மனுநீதி எதுக்கு மணல் அள்ளுவதற்கா? திமுகவுக்கு ஓட்டுப்போட்ட டெல்டா மாக்காணுகளே இன்னும் 5 வருஷம் காவிரியில் லாரி மட்டும் தான் ஓடும். எலிக்கறி தின்று தான் வயிற்றை கழுவ வேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
01-ஜூன்-202108:42:54 IST Report Abuse
duruvasar 28 நாளில் 234 தொகுதி சுற்றுப்பயணம் செய்தமாதிரி தான். தினம் ஒரு திறப்பு என சாதனைபடைக்கிறார் விடியல் நாயகன். ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு உத்தராகண்ட் முதல்வர் கவச உடையணிந்து கொரணா வார்டில் ஆய்வு செய்த செய்தியை மறைத்து அதன்மேல் தமிழக முதல்வர் ஸ்டிக்கர் ஒட்டி "முதல் முதல்வர்" பட்டம் கொடுத்த முன்களஸ் மற்றும் முட்டுஸ்களுக்கு நன்றிகள் பல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X