கரூரில் சிறப்பு சிகிச்சை மையம் துவக்கி வைத்தார் ஸ்டாலின்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் சிறப்பு சிகிச்சை மையம் துவக்கி வைத்தார் ஸ்டாலின்

Updated : ஜூன் 02, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (7)
Share
சென்னை:தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் படுக்கை வசதி உடைய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் உள்ள டி.என்.பி.எல்., டவுன்ஷிப் பகுதி சமுதாயக் கூடத்தில், 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை
 கரூர், சிறப்பு சிகிச்சை மையம், ஸ்டாலின்

சென்னை:தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் படுக்கை வசதி உடைய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் உள்ள டி.என்.பி.எல்., டவுன்ஷிப் பகுதி சமுதாயக் கூடத்தில், 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது.அவற்றில், 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையவை. இந்த சிகிச்சை மையத்திற்கு தேவையான மின்சாரம், குடிநீர் வசதி, மருத்துவ பணியாளர்களுக்கான அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க 1 கோடி ரூபாய் செலவில், உபகரணங்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் உள்ள மருத்துவ மனைகளுக்கும், ஆக்சிஜனை சிலிண்டர்களில் நிரப்பி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலர் இறையன்பு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் ராஜிவ்ரஞ்சன், எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X