விருந்து வைத்து கொரோனாவுக்கு அழைப்பு...

Added : மே 31, 2021
Advertisement
மழை மேகங்கள் சூழ்ந்த மாலை வேளையில், மித்ராவை, மொபைல் போனில் அழைத்தாள் சித்ரா.''ஹாய் மித்து. எப்படி இருக்கற?''''நல்லா இருக்கேங்க்கா, ஏரியாவுல நிறைய பேருக்கு கொரோனா இருக்கறதால வெளியில தலை காட்டறது இல்ல,''''அதுதான் கரெக்ட்... ரொம்ப கவனமா இருக்கோணும் மித்து. 'பாஸிட்டிவ்' கேஸ் அதிகமாயிட்டே போகுது. இது ஒரு பக்கமிருக்க, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலில் பல குழப்பங்கள்,
 விருந்து வைத்து கொரோனாவுக்கு அழைப்பு...

மழை மேகங்கள் சூழ்ந்த மாலை வேளையில், மித்ராவை, மொபைல் போனில் அழைத்தாள் சித்ரா.''ஹாய் மித்து. எப்படி இருக்கற?''''நல்லா இருக்கேங்க்கா, ஏரியாவுல நிறைய பேருக்கு கொரோனா இருக்கறதால வெளியில தலை காட்டறது இல்ல,''''அதுதான் கரெக்ட்... ரொம்ப கவனமா இருக்கோணும் மித்து. 'பாஸிட்டிவ்' கேஸ் அதிகமாயிட்டே போகுது. இது ஒரு பக்கமிருக்க, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலில் பல குழப்பங்கள், பிரச்னை வருது. மருத்துவ, டாக்டர்ஸ், நர்ஸ் ரொம்பவே கஷ்டப்படறாங்க,''''திருப்பூர்ல கொரோனாவுல இறந்தவரோடு பாடியை 'மார்ச்சுவரியில்' இருந்து, மாத்தி கொடுத்து அனுப்பினாங்கல்ல. இந்த விஷயம் தெரியாம, சடலத்தை வாங்கிட்டு போனவங்க, மின் மயானத்துல வைச்சு எரிச்சுட்டாங்க,''''சடலம் மாறினத தெரிஞ்சுகிட்ட குடும்பத்தினர், ஹாஸ்பிடலில் கேட்கும் போது, 'தப்பு நடந்து போச்சு; மன்னுச்சுக்கோங்க', அஸ்தி, இறப்பு சான்றிதழை எந்த பிரச்னையும் இல்லாம வாங்கி கொடுத்துடறோம்ன்னு சொல்லியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.''தங்களோட தப்பை மறைக்க, ஆபீசர்ஸ் எதுவேணும்னாலும் பண்ணுவாங்க. இதுவே, பொதுமக்கள் தரப்புல இருந்து, ஏதாவது தப்பு பண்ணியிருந்தா சும்மா விட்ருப்பாங்களா,'' என்றாள் சித்ரா.''ஊரடங்கு காரணமா, நடமாடும் காய்கறி கடைகளுக்கு 'பர்மிஷன்' கொடுத்திருக்காங்கல்ல. அதுல, ஏகப்பட்ட தில்லுமுல்லு நடந்திருக்கு'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''பல்லடத்தில் காய்கறி விலையெல்லாம் கன்னாபின்னான்னு ஏறிப்போச்சு. 'டிபார்ட்மென்ட் ஆபீசர்'ங்க, வியாபாரிகளுக்கு ரொம்ப 'சப்போர்ட்டா' இருக்கறது தான், இதுக்கு காரணம்ன்னு பேசிக்கிறாங்க'' என்றாள் மித்ரா.''உண்மைதான்டி. திருப்பூர்ல சரக்கு ஆட்டோ, தள்ளுவண்டி, டூவீலர்கள்ல நடமாடும் காய்கறி கடை நடத்த நிறைய பேரு 'பாஸ்' வாங்கியிருக்காங்க. அவங்கள்ல பல பேருகிட்ட இருந்து, சூரியக்கட்சிக்காரங்க, தலைக்கு ரெண்டாயிரம் வரை 'கல்லா' கட்டிட்டாங்களாம்,'' சித்ராவும் தன் பங்குக்கு சொன்னாள்.''கொரோனா காலத்திலும், வசூல்ல குறியா இருக்கற கட்சிக்காரங்க மேல நடவடிக்கை எடுக்கலைன்னா, சி.எம்.,க்கு தான் கெட்ட பேரு வரும்,'' ஆவேசப்பட்டாள் மித்ரா.''கட்சின்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது மித்து. லிங்கேஸ்வரர் ஊர் கவர்ன்மென்ட் காலேஜ்ல, கொரோனா 'கேர் சென்டர்' கொண்டு வர, தன்னார்வலர்ங்க பல பேரு 'ட்ரை' பண்ணாங்க. அவங்களுக்கு, வடக்கு மாவட்ட இலக்கிய அணி நிர்வாகிங்க சிலரு 'சப்போர்ட்' பண்ணியிருக்காங்க. மினிஸ்டரும் 'ஓபன்' பண்ணி வைச்சுட்டாரு,''கேர் சென்டர் அமைக்க ெஹல்ப் பண்ண பிரைவேட் டாக்டரை போனில் கூப்பிட்ட ஆளுங்கட்சி லோக்கல் 'மாஜி' ஒருத்தர், 'நாங்கெல்லாம் இந்த வேலைய செய்ய மாட்டோமா. அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்களான்னு' கேட்டாராம்,''''இந்த விஷயம் கட்சி தலைமையின் கவனத்துக்கு போனதால, தலைமைல இருந்து, பொறுப்பாளர போன்ல கூப்பிட்ட கட்சி நிர்வாகி ஒருத்தரு, 'இனி, கட்சிக்காரங்ககிட்ட இருந்து 'டிஸ்டர்ப்' இருக்காது. நாங்க பாத்துக்குறோம்ன்னு ஆறுதல் சொன்னாராம்...'' என்றாள் சித்ரா.''அடடே பரவாயில்லையே'' என மித்ரா கூற, ''ஒரு நிமிஷம் அக்கா; என் போன்ல யாரோ கூப்பிட்டுட்டே இருக்காங்க'' என சொலலி, மொபைல் போன் ஸ்கிரீனில், 'சுவாமிநாதன்' என்ற பெயர் வந்து போனது. அதனை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தாள்.''அதே ஊர்ல, கொரோனா ஊரடங்கு விதியை மீறி, ஒரு ஆபீசர் விருந்து உபசரிப்பு நடத்தின விவகாரம், சலசலப்பை ஏற்படுத்திடுச்சு,'' என்றாள் சித்ரா.''ஓ… அப்படியா''''ஆமான்டி. டவுன் பஞ்சாயத்து ஆபீஸ்ல வேல செய்ற, ெஹல்த் ஆபீசர் ஒருத்தரு, தன்னோட 'பர்த்டே'வுக்காக, ஆபீஸ்ல வேல செய்ற, 130 பேருக்கும் சிக்கன் பிரியாணி விருந்து வச்சாராம். அதில, சமூக இடைவெளி இல்லாம, எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டிருக்காங்க. கொரோனா டைம்ல இது தேவையான்னு, பலரும் கேள்வி கேட்கறாங்க... இது மட்டுமல்ல, யாரையும் மதிக்காமல், பெரிய ஆபீசர் கணக்கா நடந்துக்கறாராம்'' என்றாள் சித்ரா.''ஆனா, அவரோ, 'கஷ்டப்பட்டு உழைக்கிற 'ஸ்டாப்ஸ்'க்கு, விருந்து வச்சது ஒரு குத்தமான்னு,' கேட்கிறாராம்...'' என்ற மித்ரா, ''எல்லாம் அந்த 'சொக்கநாதனுக்கே' வெளிச்சம்,'' என சத்தமாக சொன்னாள்.''ஏன்டி இப்படி கத்தறே,'' கோப்பட்ட சித்ரா, ''இந்த மாதிரி 'சென்சிடிவ்' சமயத்துல, ஆபீசர்ஸ் கவனமா நடந்துக்கோணும்'' என்று சொல்லி, ''கொரோனா 'வேக்ஸின்' போடற விவகாரத்துல, ஏகப்பட்ட குழப்பமாம்,'' என தடுப்பூசி மேட்டர் பேசினாள்.''பல்லடத்துல, பிரைவேட் கம்பெனிக்காரங்களுக்கு உடனே 'வேக்ஸின்' கிடைக்குதாம். ஆனா, தனியா யாராச்சும் போனா, 'இன்று போய் நாளை வா'ன்னு, அனுப்பிடறாங்களாம். இதுல ஏதோ பெரிய உள்குத்து இருக்குன்னு, 'பப்ளிக்' மத்தியில் பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''ஆமாங்க்கா. 'ெஹல்த் டிபார்ட்மென்ட்' ஆபீசருங்க, எந்தவொரு தகவலையும் சொல்றது இல்லைன்னு, எல்லாரும் புலம்பறாங்க. புதுசா ஜாயின்ட் பண்ண ஆபீசரும் அப்படித்தான் போல...''''ஒரு நிருபர் போனில் கூப்பிட்டதற்கு, முதலில் போனை எடுத்து பேசிட்டு, யாரு, என்ன விபரம்னு கேட்டுட்டு, அடுத்த முறை கூப்பிட்டா, 'அட்டெண்ட்' பண்றது இல்லையாம். நம்பரை 'பிளாக்'கில் போட்டு வச்சிடறாராம்,'' என்றாள் மித்ரா.''அங்க மட்டுமில்ல, அவிநாசியிலும் அப்படித்தான். ஆபீசர்ங்களே இப்படி பண்ணா, சரியான தகவல் மக்களுக்கு எப்படி போய்ச்சேரும். இதையெல்லாம் கலெக்டரு தான் கவனிக்கோணும்?'' என்றாள் மித்ரா.''ஊரடங்குல சரக்கு விற்பனை மட்டும், குறையவே இல்லை. பறிமுதல் செஞ்ச சரக்கு பாட்டிலை வெளியே வித்து, அதுல வந்த காசை பங்கு போட்ட காக்கிச்சட்டைக்காரங்க பத்தி, சொல்றேன் கேளுங்க,'' என 'டாஸ்மாக்' மேட்டர் பேசினாள்.''சிட்டியில், வடக்கு பார்த்துள்ள ஸ்டேஷன்ல, 'எலெக்ஷன்' சமயத்துல, சட்ட விரோதமா விற்கப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் பண்ணி, ஸ்டேஷன்ல வச்சிருந்தாங்க. இப்ப, ஊரடங்கால 'டாஸ்மாக்' கடைங்களுக்கு 'லீவு' விட்டதை சாதகமா பயன்படுத்தி, அஞ்சு போலீஸ்காரங்க, மதுபாட்டில்களை வெளியில வித்து, 'கலெக்ஷன்' ஆன பணத்தை பங்கு போட்டுகிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''அதே மாதிரி லிங்கேஸ்வரர் ஊர்ல இருக்க 'ஆல்வுமன்' போலீஸ் ஸ்டேஷன்ல வேற மாதிரி. 'கேஸ்' விஷயமா நடக்கிற டீலிங்கில் வரும் 'மாமூல்' வசூலை, கண்ல காட்டாம, ஸ்டேஷன் ஆபீசரு, மொத்தமா, சுருட்டிக்கிறாருன்னு, 'ஸ்டாப்ஸ்' கடுப்புல இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.''அதுக்கெல்லாம் 'சரஸ்வதி' அருள் வேணும்,'' என சிரித்த மித்ரா, ''இதே மாதிரி தான், சிட்டிக்குள்ள 'டிராபிக்' வேலைய கவனிக்கிற பெரிய ஆபீசரோட வண்டி, அடிக்கடி 'லிமிட்' தாண்டி, தாராபுரம் ரோட்ல 'டேக் டைவர்ஷன்,' ஆகுதாம்''''அந்த ஆபீசரு, சிட்டிக்கு வெளியில ஒரு தோட்டத்தை வாங்கிட்டு, நாட்டு மாடுகள வளர்த்து, பால் விற்பனைலேயும் வருமானம் பாக்குறாராம். அந்த வேலை சரியா நடக்குதான்னு பாக்கத்தான், அப்பப்போ அவரோட வண்டி அங்கே போகுதாம்...'' மித்ரா சொன்னாள்.''ஆமான்டி, நானும் கேள்விப்பட்டேன். அவரு, 'ஜாய்ன்ட்' பண்ண கொஞ்சா நாள்ளயே 'செல்வ' சீமானா 'கொடி' கட்டி பறக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.''அக்கா... மொபைல்ல சார்ஜ் கம்மியாகுது. அப்புறமா பேசறேன்,'' எனக்கூறி, இணைப்பை துண்டித்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X