பொது செய்தி

இந்தியா

தடுப்பூசிகளை மாற்றி தரலாமா? துவங்கியது ஆய்வு!

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :தடுப்பூசி வழங்குவதை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இரண்டு தடுப்பூசிகளை மாற்றி மாற்றி தரலாமா; ஒரு, 'டோஸ்' மட்டுமே போதுமா போன்ற ஆய்வுகள் நடந்து வருகின்றன.கொரோனாவுக்கு எதிராக, 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரண்டு தடுப்பூசிகள் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை பெறுவதற்கான முயற்சி நடக்கிறது.
தடுப்பூசிகள், மாற்றி தரலாமா?   விரிவான ஆய்வு!

புதுடில்லி :தடுப்பூசி வழங்குவதை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இரண்டு தடுப்பூசிகளை மாற்றி மாற்றி தரலாமா; ஒரு, 'டோஸ்' மட்டுமே போதுமா போன்ற ஆய்வுகள் நடந்து வருகின்றன.கொரோனாவுக்கு எதிராக, 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரண்டு தடுப்பூசிகள் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளன.

வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை பெறுவதற்கான முயற்சி நடக்கிறது. தட்டுப்பாடு உள்ளதால், அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம், தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், மாற்று வழிகள் குறித்தும் ஆராயப்படுகிறது. இது குறித்து, 'நிடி ஆயோக்' அமைப்பின் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:தற்போது வழங்கப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாற்றி மாற்றி தரலாமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

குறிப்பாக, முதல் டோஸ், ஒரு நிறுவனத்தின் ஊசியையும், இரண்டாவது டோஸ், மற்றொரு நிறுவனத்தின் ஊசியையும் என்பது குறித்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி அறிமுகம் செய்தபோது, ஒரு 'டோஸ்' போதும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால்,சில இடங்களில் போதிய பலனளிக்காததால், இரண்டு 'டோஸ்' வழங்கப்பட்டு வருகிறது.தற்போது இரண்டு டோஸ்களுக்கும் இடையேயான இடைவெளி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு 'டோஸ்' மருந்தே சிறப்பான பலனளிக்கிறதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக அதிகமானோருக்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
01-ஜூன்-202108:04:36 IST Report Abuse
blocked user ஒரெ தொழில் நுணுக்கம் என்றால் ஓகே... வேறு வேறு தொழில் நுணுக்கம் என்றால் பயனில்லை..
Rate this:
Cancel
01-ஜூன்-202105:11:43 IST Report Abuse
ஆப்பு எல்லாத்தையும் கலந்து குடுப்பது தமிழகம், மற்றும் இந்தியாவில் பரம்பரையாக உள்ளதே. எல்லா தடுப்பூசிகளையும் கலந்து கூட்டாஞ்சோறா குடுத்திடுங்க. எந்த ஊரிலிருந்து வைரஸ் பரவுனாலும் எதிர்த்துப் போராடுவோம். அப்பிடியே கொரோனா வந்தா அச்சம் தேவையில்லைன்னு சொல்லச் சொல்லிடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X