இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி பதவி விலகுகிறார் நெதன்யாகு

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஜெருசலேம் : இஸ்ரேலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. இதையடுத்து, பிரதமர் நெதன்யாகு பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேலில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்தது. ஒவ்வொரு தேர்தலிலும், நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இருந்த போதிலும்

ஜெருசலேம் : இஸ்ரேலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. இதையடுத்து, பிரதமர் நெதன்யாகு பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



latest tamil news



மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேலில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்தது. ஒவ்வொரு தேர்தலிலும், நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இருந்த போதிலும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், நீடிக்க முடியவில்லை.சமீபத்திய தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இல்லை என, நெதன்யாகு, ஜனாதிபதி ரூவன் ரிவ்லினிடம் தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் யாயிர் லாபிட்டுக்கு, பெரும்பான்மையை நிருபிக்க, 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.


latest tamil news



இதற்கான, 'கெடு' நாளை முடிவடைகிறது.இந்நிலையில் முன்னாள் ராணுவ அமைச்சரும், யமினா கட்சி தலைவருமான நப்டாலி பென்னட், அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து, நப்டாலி பென்னட் கூறும்போது,''எனக்கும், யாயிர் லாபிட்டுக்கும் கொள்கை வேறுபாடுகள் உள்ள போதிலும், மீண்டும் தேர்தல் வருவதை தடுக்க ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க உள்ளோம்,'' என்றார்.இந்த கூட்டணியில் நெதன்யாகு விற்கு ஆதரவளித்து வந்த அரபு கட்சியும் தற்போது இணைந்துள்ளது. அதனால் பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது.

புதிய பிரதமராக யாயிர் லாபிட் பொறுப்பேற்பார் என, தெரிகிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அவர் பதவி விலகி, நப்டாலி பென்னட் பிரதமராக வழி விடுவார். இதன் வாயிலாக, 2009 முதல் இஸ்ரேல் பிரதமராக உள்ள நெதன்யாகு விரைவில் பதவிவிலகுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
01-ஜூன்-202110:50:56 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN யார் வந்தாலும் இஸ்ரேல் பாரத உறவு உறுதியானது. அனைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளை இணைந்து நாம் சம்ஹாரம் செய்வோம்.
Rate this:
Cancel
01-ஜூன்-202107:55:27 IST Report Abuse
அருண், சென்னை எது எப்படியோ...ஒற்றுமையா பாலஸ்தீன தீவிரவாதிகளை இஸ்ரேலக்குள்ள விடாம இருந்தா சரி...
Rate this:
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூன்-202109:51:19 IST Report Abuse
aashikthe palestian people are not terrorist....
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
01-ஜூன்-202106:57:25 IST Report Abuse
kijan ஜின்ஷோ அபே ....டிரம்ப் ...நேதன்யாஹூ ......அடுத்தது நம்ம மாமல்லபுரம் சப்பை மூக்கர் தான் ... என்னோட ராசி நல்ல ராசி ....அது எப்போதும் பெரியவங்க ஆசி ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X