சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : அவர்களை மறந்து விடாதீர்!

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :களந்தை நரசிம்ம சுப்பிரமணியன், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம் : தமிழகம் கல்வியில் முன்னேற்றம் அடைய, தனியார் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் வழங்கியது. இதனால், ஊர்தோறும் பள்ளி என்ற விரிவான நிலை தமிழகத்தில் உருவானது. அரசு பள்ளியை விட தரமான கல்வியை வழங்க, தனியார்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
களந்தை நரசிம்ம சுப்பிரமணியன், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம் : தமிழகம் கல்வியில் முன்னேற்றம் அடைய, தனியார் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் வழங்கியது. இதனால், ஊர்தோறும் பள்ளி என்ற விரிவான நிலை தமிழகத்தில் உருவானது. அரசு பள்ளியை விட தரமான கல்வியை வழங்க, தனியார் பள்ளிகள் பெரிதும் ஆர்வம் காட்டி, கல்வி சேவை புரிந்து வருகின்றன. தனியார் பள்ளியில் ஏராளமான ஆசிரியர்கள்குறைந்த சம்பளத்தில், நிறைவாக சேவை புரிந்து வருகின்றனர். ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள், அறிவியல், விளையாட்டு, கணினி பயிற்சி என பல்வேறு நுண்கலைகளை கற்றுத் தருவதிலும், தனியார் பள்ளிகள் தங்களுக்குள் போட்டிக் களத்தை உருவாக்கி கொண்டுள்ளன.latest tamil newsதனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கான ஆசிரியர், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் வேலையில்லா பற்றாக்குறையை, தனியார் பள்ளிகள் சிறிதளவு குறைத்துள்ளன. மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வு, கண்ணியம், கட்டுப்பாடுடன், குறைந்த ஊதியத்தில் நிறைவான சேவையை தனியார் பள்ளி ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வறுமைக்கோட்டின் விளிம்பில் தவிக்கின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்க, தனி அமைப்பு ஏதும் கிடையாது.

ஓட்டு வங்கி கணக்கு போடும் அரசியல் கட்சிகள், அவர்களை புறக்கணித்து விட்டன. கல்வி வளர்ச்சிக்கு உதவும் ஆசிரியர்களை, மாணவரின் பெற்றோரும் மறந்து விட்டனர். பள்ளியை அடிக்கடி ஆய்வு செய்யும் கல்வித் துறை அதிகாரிகளும் கூட, தனியார் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வருவதில்லை. கொரோனாவின் கோர தாண்டவம், பல்வேறு துறைகளிலும், பலரையும் பலவிதமாக பதம் பார்த்தாலும், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள், அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க உதவுகின்றன.


latest tamil news
ஆனால், தமிழகத்திலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களின் கஷ்டத்தை தீர்க்க, இதுவரை யாரும் உதவி செய்ததாக தெரியவில்லை. பள்ளியில் வேலையும் இல்லை; அதனால் சம்பளமும் இல்லை. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மீண்டும் வேலைக்கு அழைப்பரா என்றும் தெரியவில்லை. வாழ்க்கை போராட்டத்தில் தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்,தமிழக அரசு கைகொடுக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
02-ஜூன்-202100:32:19 IST Report Abuse
Mohan ஞாபகம் இருந்தாதானே மறக்க.
Rate this:
Cancel
Decmvasena - Pudukkottai,இந்தியா
01-ஜூன்-202119:12:43 IST Report Abuse
Decmvasena தனியார் பள்ளி ஆசிரியர்களை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் அனைவருக்கும் தகுதிதேர்வின்றி பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் இதனால் அரசு பள்ளி தரமும் உயரும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வும் உயரும்.
Rate this:
Cancel
அத்வைத் ராமன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
01-ஜூன்-202118:58:35 IST Report Abuse
 அத்வைத் ராமன் ஊரடங்கின் போது கரோனா பரவலை தடுக்கலாம் என்பது சரியென்றாலும், அந்த நேரத்தில் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களின் மனநிலை கரோனா பாதித்தவர்களை விட மோசமாகி கொண்டிருக்கிறது.வீட்டை விட்டு வெளியில் போக முடியாது. வாழ்க்கை செலவுக்கு பணமில்லை. பக்கத்து வீட்டினருடன் கூட பேச கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X