பொது செய்தி

இந்தியா

ஆந்திர பாரம்பரிய மருந்துக்கு மாநில அரசு அனுமதி

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
அமராவதி : ஆந்திராவில், ஆயுர்வேத மருத்துவர் தயாரித்த பாரம்பரிய மருந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.ஆந்திரா நெல்லுார் மாவட்டம் கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த பரம்பரை ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா, கொரோனாவை விரைந்து குணப்படுத்தும் சொட்டு மருந்தை அறிமுகம் செய்தார். கொரோனா பாதிப்பிற்கு உள்ளானோரின் உடலில் ஆக்சிஜன்

அமராவதி : ஆந்திராவில், ஆயுர்வேத மருத்துவர் தயாரித்த பாரம்பரிய மருந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.



latest tamil news




ஆந்திரா நெல்லுார் மாவட்டம் கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த பரம்பரை ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா, கொரோனாவை விரைந்து குணப்படுத்தும் சொட்டு மருந்தை அறிமுகம் செய்தார். கொரோனா பாதிப்பிற்கு உள்ளானோரின் உடலில் ஆக்சிஜன் குறைபாட்டிற்கு, ஓரிரு நிமிடங்களில் இந்த மருந்தால் தீர்வு கிடைப்பதாக அவர் கூறினார்.இதுகுறித்த தகவல் அறிந்த ஏராளமானோர் அவரது வீட்டின் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மருந்தின் தன்மை குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தரும்படி மத்திய ஆயுர்வேத மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


latest tamil news


இதற்கிடையே, தன் ஆயுர்வேத மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க அனுமதி கோரி, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ஆனந்தையா மனு தாக்கல் செய்தார்.அதில், 'பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்துறையில் உள்ள என்னால், தனிப்பட்ட முறையில் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தால், பக்கவிளைவுகள் இல்லை என்பதுடன், இதற்கு அங்கீகாரம் ஏதும் தேவையில்லை.'இந்த மருந்தை நான் விற்பனை செய்யவில்லை.

பாதிப்பிற்கு உள்ளானோருக்கு இலவசமாகவே வழங்குகிறேன்' என, கூறப்பட்டு இருந்தது. மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆந்திர அரசு தரப்பில், ஆனந்தையாவின் மருந்திற்கு தனிப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளதால், அதனை எற்பதுடன், பொதுமக்களுக்கு வழங்க அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.மத்திய ஆயுர்வேத மருத்துவ கவுன்சில் அறிக்கை அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது.முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், 'பி, எல்' மற்றும் 'எப்' என, சாதாரணமாக பெயரிடப்பட்ட மூன்று பாரம்பரிய மருந்துகளுக்கு, அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது.


latest tamil news


ஆதரவாளர் பலி : ஆந்திராவின் நெல்லுாரை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோட்டையா, ஆனந்தையாவின் ஆயுர்வேத சொட்டு மருந்து, கொரோனாவில் இருந்து தன்னை விரைந்து குணப்படுத்தியதாக, 'வீடியோ' வெளியிட்டு இருந்தார்.இதற்கிடையே, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்தது. நெல்லுார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை மரணம் அடைந்தார். வேறு சில உடல் பாதிப்புகளால் அவர் உயிரிழந்ததாக, டாக்டர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
01-ஜூன்-202119:44:10 IST Report Abuse
Loganathaiyyan வேடிக்கை என்னவென்றால் அதற்குள் எனக்கு வாட்சப்பில் வந்து விட்டது கோவிஷீல்டு கோவாக்சின் போலவே இந்த கத்திரிக்காய் மருத்துவம் சாப்பிட்ட தலைமை ஆசிரியர் கொரோனவால் இறந்து விட்டார் என்று??நம்ப பார்மசி மாபியா ஆரம்பித்துவிட்டது தன்னுடைய தகிடுதத்ததை
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
01-ஜூன்-202115:11:15 IST Report Abuse
INDIAN Kumar மூலிகைகளால் குணப்படுத்தமுடியாது என்று எதுவும் கிடையாது ஆனால் திட்டமிட்டு மறைக்கிறார்கள் மாபியா கும்பல்கள்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
01-ஜூன்-202115:09:28 IST Report Abuse
INDIAN Kumar மருத்துவ மாபியாக்களுக்கு முடிவு கட்டுங்கள் ஆயுர்வேதம் தழைக்கட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X