பொது செய்தி

இந்தியா

லட்சத்தீவு மக்களிடம் கருத்து கேட்கப்படும்: அமித் ஷா உறுதி

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி : 'லட்சத்தீவு தொடர்பான புதிய வரைவு சட்டங்கள், அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே அமலுக்கு வரும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.யூனியன் பிரதேசமான லட்சத் தீவு நிர்வாகி பிரபுல் படேல், மாட்டிறைச்சிக்கு தடை, மதுக் கடை திறப்பு உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. இத்துடன்,
Amit Shah, Lakshadweep, Mohammed Faizal

புதுடில்லி : 'லட்சத்தீவு தொடர்பான புதிய வரைவு சட்டங்கள், அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே அமலுக்கு வரும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யூனியன் பிரதேசமான லட்சத் தீவு நிர்வாகி பிரபுல் படேல், மாட்டிறைச்சிக்கு தடை, மதுக் கடை திறப்பு உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. இத்துடன், லட்சத்தீவு மேம்பாடு மற்றும் சமூக விரோத செயல்களுக்கு தடை விதிப்பது தொடர்பான இரு வரைவு சட்டங்களுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

லட்சத்தீவில் நிலம் கையகப்படுத்துவது, சமூக விரோதிகளை ஓராண்டு வரை சட்டப் பாதுகாப்பின்றி சிறை வைப்பது போன்றவற்றுக்கு வழி வகுக்கும் இந்த வரைவு சட்டங்கள் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, லட்சத்தீவின் தேசியவாத காங்., எம்.பி., முகமது பைசல் நேற்று சந்தித்து பேசினார்.


latest tamil news



இதைத் தொடர்ந்து, முகமது பைசல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது பரிசீலனையில் உள்ள வரைவு சட்டங்கள் குறித்து, லட்சத்தீவில் மாவட்ட பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன் பின்பே சட்ட அமலாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என, அமித் ஷா உறுதி அளித்துள்ளார். பிரபுல் படேலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அமித் ஷாவிடம் தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdhul Nazeer - Tiruppur,இந்தியா
03-ஜூன்-202109:10:39 IST Report Abuse
Abdhul Nazeer இலங்கை சீனா பாகிஸ்தானிற்கு அப்பு வைக்க இதை செய்தே அக வேண்டும். அமிதா ஷா நிச்சயம் பின்வாங்க கூடாது
Rate this:
Cancel
01-ஜூன்-202114:04:40 IST Report Abuse
ஆரூர் ரங் இன்று வரை மஹாத்மா காந்தியின் சிலை அனுமதிக்கப்படா த ஒரே பகுதி🤫 லட்சத்தீவு தான். மதவெறி தடுக்கிறது 😡
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
01-ஜூன்-202113:00:22 IST Report Abuse
Suppan "குண்டர் சட்டம்" கடத்தல்காரர்களைக் கதி கலங்கச் செய்து விட்டது. மாட்டுக் கறிக்குத் தடை என்று புருடா விடுகிறார்கள். சட்டபூர்வமாக அனுமதி வாங்குங்கள். பள்ளிப் பிள்ளைகளுக்கான மதிய உணவில் மாட்டுக் கறிக்குப் பதிலாக முட்டையும் மீனும் கொடுக்கிறார்கள். மீன்கள் லட்சத்தீவிலேயே கிடைக்கின்றன. இதிலென்ன தவறு. ஹோட்டல்களில் மட்டும் தான் மது உண்டு. தமிழ்நாடு மாதிரி வீதிக்கு வீதி டாஸ்மாக் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X