கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனைக்கு பரிவாரங்களுடன் செல்வதா? எம்.எல்.ஏ.,க்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை : மருத்துவமனையை, சிகிச்சை முறையை பார்வையிட, எம்.எல்.ஏ.,க் கள் செல்லும் போது, கொரோனா தடுப்பு நிபந்தனைகளை பின்பற்றவும், பரிவாரங்களை கட்டுப்படுத்தவும், சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஆக்சிஜன், தடுப்பூசி, 'ரெம்டெசிவிர்' மருந்து பற்றாக்குறை குறித்து வெளிவந்த செய்திகள் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை
Madras High Court, HC, MLA, Corona

சென்னை : மருத்துவமனையை, சிகிச்சை முறையை பார்வையிட, எம்.எல்.ஏ.,க் கள் செல்லும் போது, கொரோனா தடுப்பு நிபந்தனைகளை பின்பற்றவும், பரிவாரங்களை கட்டுப்படுத்தவும், சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஆக்சிஜன், தடுப்பூசி, 'ரெம்டெசிவிர்' மருந்து பற்றாக்குறை குறித்து வெளிவந்த செய்திகள் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அவ்வப்போது அரசிடம் அறிக்கை பெற்று, உத்தரவுகளை பிறப்பிக்கிறது.இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil newsநம்புகிறோம்


அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கொரோனா இரண்டாவது அலை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறைந்திருப்பது தெரிகிறது.படுக்கை வசதிகளை அதிகரித்திருப்பதாக, அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு, இந்த கூடுதல் வசதிகள் தொடரும் என, நம்புகிறோம்.கூடுதல் செலவு ஆனாலும், இரண்டாவது அலையில் ஏற்பட்ட பற்றாக்குறை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதால், வசதிகளை தொடர வேண்டும். ஆக்சிஜன் வினியோகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு பற்றி, மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிசம்பருக்குள், 216 கோடி 'டோஸ்' தடுப்பூசி மருந்து கிடைத்து விடும் என, மத்திய அரசு ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. விரைவில், இலக்கை அடையும் என, நம்புகிறோம். அரசின் இணையதளத்தில், கொரோனா விபரங்களை வெளியிட வேண்டும் என்றும், பலர் பரிந்துரைத்தனர். நோய் பாதிப்பு தீவிரமானவர்கள், இறந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை, அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். மற்ற இடங்களில் உள்ளது போல, எண்ணிக்கையை குறைத்து கூறுவதாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எந்த குற்றச்சாட்டும் இல்லை.


latest tamil newsபின்பற்றுவதில்லை:


மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் செல்லும் போது, உடன் வரும் பரிவாரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என, இங்கே பரிந்துரைக்கப்பட்டது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செல்லும் போது, அதிகாரிகள் சிலர் தான் உடன் செல்கின்றனர். ஆனால், சில எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவாளர்கள் படை சூழ வருகின்றனர். அவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை.எனவே, மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை, சிகிச்சை முறையை, எம்.எல்.ஏ.,க்கள் பார்வையிட வரும்போது, கொரோனா தடுப்பு நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

சில நேரங்களில்உடன் வர வேண்டாம் என்று கூறினாலும், அவர்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாது.இருந்தாலும், உடன் வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.விசாரணையை, வரும், 7ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
01-ஜூன்-202116:00:27 IST Report Abuse
Kumar ஐயா துரைமார்களே வெறும் அறிவுரை மட்டும்தானா? இந்த கண்டனம்,அபராதம்,வாகனம் பறிமுதல் இது எல்லாம் சாதாரண மக்களுக்குதானா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
01-ஜூன்-202113:29:03 IST Report Abuse
sathish அய்யா நீதிபதிகளே, உங்களுக்கு எதில் தான் மூக்கை விடுவது என்று ஒரு விவஸ்தையே இல்லையா ? அது அவர்களின் பாரம்பரியம் அதை மாத்த முடியுமா ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-ஜூன்-202111:41:12 IST Report Abuse
Ramesh Sargam முதலமைச்சரே எங்கு சென்றாலும் ஒரு பெரிய பரிவாரங்களுடன் - ஏதோ அந்த காலத்தில் ராஜாக்கள் போருக்கு செல்வதுபோல் - செல்கிறார். அட வெளியில் அறுபதுக்கும் மேற்பட்ட கார்கள் என்றால், மருத்துவமனையின் உள்ளும் டஜன் கணக்கில் 'பரிவாரங்கள்'. நீதிமன்றம், முதலில் முதலமைச்சருக்கு புத்தி புகட்டவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X