பொது செய்தி

தமிழ்நாடு

15 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்: வானிலை மையம் எச்சரிக்கை

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : 'இன்றும், நாளையும், 15 மாவட்டங்களில், இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரையில், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.திருத்தணி, 41; சென்னை விமான நிலையம், 40; சென்னை நுங்கம்பாக்கம், கடலுார், கரூர் பரமத்தி, நாகை,
weather today, weather report, Tamilnadu

சென்னை : 'இன்றும், நாளையும், 15 மாவட்டங்களில், இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரையில், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.திருத்தணி, 41; சென்னை விமான நிலையம், 40; சென்னை நுங்கம்பாக்கம், கடலுார், கரூர் பரமத்தி, நாகை, புதுச்சேரி, 39; வேலுார், துாத்துக்குடி, தர்மபுரி, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது. மற்ற இடங்களில், 38 டிகிரி செல்ஷியசுக்கு குறைவாக வெப்பநிலை இருந்தது.


latest tamil news



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜூன்-202109:48:16 IST Report Abuse
மு.செந்தமிழன் மழைபெய்கிற லிஸ்டில் மதுரை வருவதே இல்லை, ஆனால் வெயில் அடிக்கும் லிஸ்டில் முதல் மாவட்டமாக வந்து விடுகிறது. எங்கள் மாவட்டம் என்ன மாதிரி டிசைன் என்றே தெரியவில்லை.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
01-ஜூன்-202106:37:53 IST Report Abuse
SUBBU Madurai: 42° degrees celsius = 107.6° fahrenheit.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூன்-202106:28:49 IST Report Abuse
oce இயல்பை விட கூடுதலாக மூன்று டிகிரி செல்ஷியஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி எனில் ஒவ்வொரு இடத்தின் இயல்பான வெப்ப அளவு என்ன. முதலில் அதை சொல்லிவிட்டு அதன் பின் கூடுதல் குறைச்சலை சொல்லலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X