பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரம் சாலையில் வாகன சோதனை தீவிரம்

Added : ஜூன் 01, 2021
Share
Advertisement
மாமல்லபுரம்-மாமல்லபுரத்தில், வருவாய் கோட்டாட்சியர் மேற்பார்வையில் வாகன சோதனை நடந்தது.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைக்கு செல்வோர், இ - பதிவு அனுமதியுடன் செல்லலாம். கட்டுப்பாடு விதிக்கப்பட்டும், கிழக்கு கடற்கரை, பழைய மாமல்லபுரம் சாலைகளில், கார், இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி செல்கின்றனர்.மாமல்லபுரம்

மாமல்லபுரம்-மாமல்லபுரத்தில், வருவாய் கோட்டாட்சியர் மேற்பார்வையில் வாகன சோதனை நடந்தது.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைக்கு செல்வோர், இ - பதிவு அனுமதியுடன் செல்லலாம். கட்டுப்பாடு விதிக்கப்பட்டும், கிழக்கு கடற்கரை, பழைய மாமல்லபுரம் சாலைகளில், கார், இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி செல்கின்றனர்.மாமல்லபுரம் வந்த கோட்டாட்சியர் சுரேஷ், பூஞ்சேரி சந்திப்பு பகுதியில் முகாமிட்டு, வாகன பயணியரை சோதிக்க நேற்று உத்தரவிட்டார். வருவாய், காவல் துறையினர், வாகனங்களை மடக்கியபோது, சிலர் ஊரடங்கு விதிகளை மீறி அனுமதியின்றி செல்வது தெரிந்தது.முப்பது நிமிட சோதனையில், கார், இருசக்கர, டாரஸ் லாரி என 12 வாகனங்களுக்கு, 15 ஆயிரத்து 550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வருவாய் துறையினர், காவல் மற்றும் உள்ளாட்சி ஆகிய துறையினருடன் இணைந்து தொடர்ந்து சோதனை நடத்த கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.l மாமல்லபுரத்தில், ஊரடங்கு விதிகளுக்கு புறம்பாக இயங்கிய எலக்ட்ரிக்கல் கடை, கல்பாக்கம் அடுத்த, அணுபுரத்தில் இயங்கிய சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றுக்கு, மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ஜேம்ஸ் நேற்று 'சீல்' வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X