மருத்துவ உதவிகளை அதிகரித்தது பிரான்ஸ்

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி : கொரோனா இரண்டாம் அலைக்கு எதிரான போரில் நமக்கு உதவும் விதமாக, மேலும் 16 ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் உட்பட பல்வேறு மருத்துவ பொருட்களை கூடுதலாக அனுப்ப உள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.கொரோனா இரண்டாம் அலையில் இருந்து நம் நாடு மீண்டு வருவதற்காக, பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.தொலைபேசி : அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட

புதுடில்லி : கொரோனா இரண்டாம் அலைக்கு எதிரான போரில் நமக்கு உதவும் விதமாக, மேலும் 16 ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் உட்பட பல்வேறு மருத்துவ பொருட்களை கூடுதலாக அனுப்ப உள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா இரண்டாம் அலையில் இருந்து நம் நாடு மீண்டு வருவதற்காக, பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
தொலைபேசி : அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை அளித்து வருகின்றன.ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து 28 டன் மருத்துவ பொருட்கள், எட்டு பெரிய ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் சமீபத்தில் வந்து சேர்ந்தன. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக சமீபத்தில் உரையாடினார்.


latest tamil news



இந்த பேச்சுக்கு பின், கூடுதலாக மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை அனுப்ப உள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இது குறித்து, இந்தியாவுக்கான பிரான்ஸ் துாதர் இமானுவேல் லெனைன் நேற்று கூறியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான போரில், இந்தியாவின் உதவியின்றி, சர்வதேச அளவிலான வெற்றி சாத்தியமில்லை.கொரோனா முதல் அலையின்போது, பிரான்ஸ் நாட்டிற்கு தேவையான பல்வேறு மருத்துவ உதவிகளை, சரியான நேரத்தில் இந்தியா செய்தது. இதற்கு நன்றி கூறும் விதமாக, இந்தியாவுக்கு உதவ, பிரான்ஸ் முன்வந்துள்ளது.

இந்த வகையில், 10 பெரிய ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள், சரக்கு விமானம் வாயிலாக, இம்மாதம் மத்தியில் இந்தியா வந்து சேரும்.பிரான்சில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் ஒவ்வொன்றும், மணிக்கு 24 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உடையவை. இரட்டிப்புஓர் இயந்திரம் வாயிலாக, 250 படுக்கைகள் உடைய மருத்துவமனை, பல ஆண்டுகளுக்கு ஆக்சிஜினில் தன்னிறைவு பெறும். அதிபர் இமானுவேல் மேக்ரானின் உத்தரவை அடுத்து, மருத்துவ உதவிகளை, பிரான்ஸ் இரட்டிப்பாக்கி உள்ளது.
வரப்போகும் நாட்களில், நுாற்றுக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள், உயர் தர வென்டிலேட்டர் கருவிகள் பிரான்சில் இருந்து அனுப்பப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-ஜூன்-202116:06:30 IST Report Abuse
தமிழவேல் சூப்பர்...
Rate this:
Cancel
Anandan P - Chennai,இந்தியா
01-ஜூன்-202112:03:26 IST Report Abuse
Anandan P பிரான்ஸ் அரசாகதிற்கு நன்றி, பாராட்டுகள், இந்த உதவியை இந்திய மக்கள் மறக்க மாட்டர்கள், இந்த உபகரணங்கள் உரிய இடத்தில் உபயோகிக்க பட வேண்டும்
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
01-ஜூன்-202110:21:40 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN இக்கட்டான இந்த நேரத்தில் உதவியத்திகற்கு பிரான்ஸ் அரசாகதிற்கு நன்றி, பாராட்டுகள், இந்த உதவியை பாரத மக்கள் மறக்க மாட்டோம் உங்களின் இக்கட்டான தருணத்தில் பலமடங்கு திரும்ப தருவோம். பிரான்ஸ் பாரத உறவு மேலும் உறுதியாக அனைவரும் ப்ராதிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X