ஐகோர்ட் இன்று திறப்பு: வரிசை கட்டும் வழக்குகள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட் இன்று திறப்பு: வரிசை கட்டும் வழக்குகள்

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (6)
Share
சென்னை: கோடை விடுமுறைக்கு பின், இன்று(ஜூன் 1) உயர் நீதிமன்றம் திறக்கப்பட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் முழு அளவில் வழக்கு விசாரணை தற்போது நடக்கப் போவதில்லை. வரும் 11ம் தேதி வரை, அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, காணொலி வாயிலாக மட்டுமே இயங்கி வந்த நீதிமன்றம், பின், வழக்கறிஞர்கள் நேரடி விசாரணை கோரினால், நேரில்
High Court, HC, open today

சென்னை: கோடை விடுமுறைக்கு பின், இன்று(ஜூன் 1) உயர் நீதிமன்றம் திறக்கப்பட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் முழு அளவில் வழக்கு விசாரணை தற்போது நடக்கப் போவதில்லை. வரும் 11ம் தேதி வரை, அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, காணொலி வாயிலாக மட்டுமே இயங்கி வந்த நீதிமன்றம், பின், வழக்கறிஞர்கள் நேரடி விசாரணை கோரினால், நேரில் ஆஜராக அனுமதித்தது. இப்படி காணொலி வாயிலாகவும், நேரடியாகவும் வழக்கு விசாரணை நடந்து வந்தது.சட்டசபை தேர்தலுக்கு பின், கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், மே மாத கோடை விடுமுறை உயர் நீதிமன்றத்துக்கு விடப்பட்டது; ஆனாலும், விடுமுறை கால நீதிமன்றம் இயங்கியது.

அப்போது, ஆக்சிஜன், தடுப்பூசி 'ரெம்டெசிவிர்' மருந்து பற்றாக்குறை தொடர்பாக வெளிவந்த செய்திகள் அடிப்படையில், தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. கோடை விடுமுறையிலும், வாரம்தோறும் இரண்டு நாட்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. அவ்வப்போது, அரசிடம் இருந்து அறிக்கை பெற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை பிறப்பித்தது.

இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின், இன்று உயர் நீதிமன்றம் இயங்க துவங்கினாலும், சென்னையில் தலைமை நீதிபதி அமர்வு உட்பட மூன்று அமர்வுகள், தனியாக மூன்று நீதிபதிகள் என, ஒன்பது நீதிபதிகள் செயல்படுகின்றனர். மதுரை கிளையில், இரு அமர்வுகள் மற்றும் மூன்று நீதிபதிகள் என, ஏழு நீதிபதிகள் செயல்படுகின்றனர். வரும் 11ம் தேதி வரை, இந்த நடைமுறையில் நீதிமன்றம் இயங்கும்.


latest tamil news
ஆட்சி மாற்றம்


ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய அட்வகேட் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுள்ளார். தற்காலிக அடிப்படையில் 23 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், தெரு விளக்குகளை எல்.இ.டி., பல்புகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, அமைச்சராக பதவி வகித்த வேலுமணிக்கு எதிராகவும்; ரேஷன் அரிசி வினியோகத்தில் முறைகேடு செய்ததாக அமைச்சராக பதவி வகித்த காமராஜ்க்கு எதிராகவும், தற்போதைய சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த வழக்கு, இம்மாதத்தில் விசாரணைக்கு வருகிறது.

மாநகராட்சி பணிகளுக்கு 'டெண்டர்' வழங்கியதில் முறைகேடு செய்ததாக, அமைச்சராக இருந்த வேலுமணிக்கு எதிராக, தி.மு.க., - எம்.பி., - ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வர உள்ளது.

தடை செய்யப்பட்ட 'குட்கா'வை சட்டசபைக்குள் எடுத்து சென்றதாக, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து, உரிமைக்குழு மற்றும் சட்டசபை செயலர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வழக்கும், விசாரணைக்கு வர உள்ளது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு; மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த வழக்கு; ஆறுகளில் கழிவுகளை வெளியேற்றுவதை தடுக்க நிபுணர்கள் குழு பரிந்துரை அளிக்க உத்தரவிட்ட வழக்கு என, பல வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளன.

அ.தி.மு.க., ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதுாறு வழக்குகளை, ரத்து செய்யக் கோரிய மனுக்களும், விசாரணைக்கு வர உள்ளன. இந்த வழக்குகளில் எல்லாம் புதிய அரசு எத்தகைய நிலைப்பாடுகளை எடுக்க உள்ளது என்பது, வழக்கு விசாரணையின்போது தெரிய வரும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X