பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி ஸ்டாக் இல்லை; வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பு

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
மதுரை: அரசு, தனியார் மருத்துவமனை வார்டுகளில் புது நோயாளிகளுக்கான காலியிடங்கள் மிக குறைவாக உள்ளன. அதேநேரத்தில் தடுப்பூசியும் இருப்பு இல்லை. மதுரை உட்பட 6 தென் மாவட்டங்களின் நேற்றைய பலி 40. பொதுமக்கள் வீட்டுக்குள் இருப்பதே கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம்.மதுரையில் 64 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டு 48 ஆயிரத்து 402 பேர் குணமடைந்தனர். மொத்த இறப்பு 902. நேற்றைய புதிய
தடுப்பூசி ஸ்டாக் இல்லை; வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பு

மதுரை: அரசு, தனியார் மருத்துவமனை வார்டுகளில் புது நோயாளிகளுக்கான காலியிடங்கள் மிக குறைவாக உள்ளன. அதேநேரத்தில் தடுப்பூசியும் இருப்பு இல்லை. மதுரை உட்பட 6 தென் மாவட்டங்களின் நேற்றைய பலி 40. பொதுமக்கள் வீட்டுக்குள் இருப்பதே கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம்.

மதுரையில் 64 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டு 48 ஆயிரத்து 402 பேர் குணமடைந்தனர். மொத்த இறப்பு 902. நேற்றைய புதிய தொற்று 695. குணமடைந்தோர் 898, புதிய பலி 14. தற்போது 15 ஆயிரத்து 591 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிய தொற்றுகள் குறைந்திருந்த போதிலும் ஆக்சிஜன், ஐ.சி.யு. படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. விருதுநகரில் 37 ஆயிரத்து 596 பேர் பாதிக்கப்பட்டதில் 28 ஆயிரத்து 898 பேர் குணமடைந்தனர். 410 பேர் இறந்தனர். இங்கு ஆக்சிஜன், ஐ.சி.யு. படுக்கைகள் நிரம்பி விட்டன. அரசு, தனியார் மற்றும் வீட்டுத் தனிமையில் தற்போது 8288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil newsதட்டுப்பாடின்றி கிடைத்து வந்த கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகத்தில் இருப்பில் இல்லை. தடுப்பூசி ஒன்றே கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்பதால் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். அரிசி, பலசரக்கு வாங்குவோரை விட தடுப்பூசிக்காக மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் முகாம்களில் தடுப்பூசி தேடி அலைகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்தாலும் 2, 3 நாட்கள் அலைந்தால் தான் தடுப்பூசி போட முடிகிறது. ஜூன் 3 - 6 வரை தடுப்பூசி போடப்படாது என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார்.


latest tamil newsகூடுமானவரை வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணிந்தால் மட்டுமே வைரசிலிருந்து நம்மை காக்க முடியும். வெளியில் செல்லும் போது முகம், வாய், முகவாய் முழுமையாக மூடியபடி மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். சானிட்டைசரால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வீடு திரும்பிய பின் ஆடைகளை மாற்றி கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். அடிக்கடி உப்பு, வெந்நீரால் வாய் கொப்பளிப்பது நல்லது. வாரம் ஒருமுறை ஆவி பிடிக்கலாம். தன் பாதுகாப்பே வைரசிடமிருந்து சமுதாயத்தை பாதுகாக்கும் ஆயுதம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
01-ஜூன்-202121:08:44 IST Report Abuse
Loganathaiyyan மார்ச் 15 ல் ஹெல்த் சென்டர் கொல்கத்தாவில் வாக்சின் ஏப்ரல் 28ல் ஹைதராபாதில் ஹெல்த் சென்டரில் (கோவின் இன்டர்நெட்டில் ரெஜிஸ்டர் செய்து இரண்டு நேரத்திலும்) 15 பேர் இருந்தார்கள்??? இந்த அளவுக்கு இன்டர்நெட் கனெக்ஷன் மத்திய அரசு செய்தது Really Great. (என்னுடைய நண்பர்கள் இன்று கூட நாங்கள் வாக்சின் போட்டுக்கொள்ளமாட்டோம் அது safe இல்லை என்று உளறிக்கொண்டு தாங்களும் போட்டுக்கொள்ளாமல் அரசை குறை கூறிக்கொண்டே தான் இருக்கின்றார்கள்) உளறுபவர்கள் உளறிக்கொண்டு தான் இருப்பார்கள் உங்களை நீங்கள் நம்பினால் தான் மற்றவர்களை நீங்கள் நம்புவீர்கள் இது தான் வாழ்க்கையின் நிஜம்.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
01-ஜூன்-202120:56:03 IST Report Abuse
Loganathaiyyan வேடிக்கையிலும் வேடிக்கை அப்போ பேசினது தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உடனே இறந்து விட்டார் தடுப்பூசி பாதுகாப்பில்லை முஸ்லீம் நேரு காங்கிரஸ் முதல் திராவிட காட்சிகள் எதிரி கட்சிகள் வரை இப்போது பிளேட்டை திருப்பிப்போட்டு ஏற்றுமதி செய்கின்றார்கள் தடுப்பூசியை இந்திய மக்கள் உயிர் மீது அவர்களுக்கு அக்கறையில்லை என்று????Pfizer நிறுவனம் காசு கொடுத்து இவர்களை வே..... போல என்னவேண்டுமானாலும் செய்யவேண்டும் நான் சொல்வது போல இவர்கள் சொல்வார்களாம் இதற்கு பதிலாக கொரோன வந்து இவர்கள் இறந்து போயிருக்கலாம் அவர்கள் பாவ மூட்டையாவது குறைந்திருக்கும்???கேவலமான இவர்கள் ஜன சேவைக்கு பதிலாக தங்கள் பணசேவைக்கு உரம் போட்டு வளர்கின்றார்கள்?????ஜனங்களுக்கு ஒரு நல்லது செய்வார்களா இவர்கள் நீ செய்யவில்லை என்று குற்றம் மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்???இந்த காம்ப்ளெக்ஸில் எங்கள் இரண்டாவது மாடியில் ஒரு நாய் எதை பார்த்தாலும் எந்த சத்தம் கேட்டாலும் வள் வள் என்று குறைக்கும்???அவ்வளவே அது செய்யும் இதற்கும் இவர்கள் வள் வள்ளுக்கும் என்ன வித்தியாசம்.
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
01-ஜூன்-202116:58:11 IST Report Abuse
krish நடந்து முடிந்ததை விமர்சனம் செய்து என்ன பலன். நடக்கவேண்டியதை பற்றி அரசு சிந்தித்தால் நன்மை. தடுப்பூசி கையிருப்பு நிலைமை அறிந்து, வயது/கால வரம்பு வரைபடுத்தி,பதினெட்டு -நாற்பைதைந்து வயோதிகரை, முறையே மூன்று பிரிவுகளாக்கி, அதாவது (18-25), (26-35), (36-45) என்ற வகையில் அட்டவணைப்படுத்தி ஆவண செயல் திட்டத்தை வழிவகுத்து, தடுப்பூசி சோதனைகளை எதிர் கொண்டு, கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அனைவரும் அரசுக்கு. இந்த முயற்சியில் வெல்ல, ஒத்துழைப்பு, ஆதரவு அளிக்க/நல்க வேண்டும். முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்.. ஒன்றுபட்டால், உண்டு வாழ்வு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X