சும்மா கூட்டணி கூட்டுறவு என பிரித்தாளும் வகையில் பேசக்கூடாது...| Dinamalar

சும்மா கூட்டணி கூட்டுறவு என பிரித்தாளும் வகையில் பேசக்கூடாது...

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (20)
Share
பா.ஜ., அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் 14 மாநிலங்களில், மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் வசிக்கின்றனர். ஜி.எஸ்.டி., வருவாயில் 60 சதவீதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63 சதவீதம், இந்த மாநிலங்களில் இருந்து தான் வருகின்றன. இதை புறக்கணித்து, மாநிலங்களுக்கு இடையே அரசியல் பாகுபாடு காட்டுவது தான் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சியா?- காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா'நீங்கள்
சும்மா கூட்டணி கூட்டுறவு என பிரித்தாளும் வகையில் பேசக்கூடாது...

பா.ஜ., அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் 14 மாநிலங்களில், மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் வசிக்கின்றனர். ஜி.எஸ்.டி., வருவாயில் 60 சதவீதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63 சதவீதம், இந்த மாநிலங்களில் இருந்து தான் வருகின்றன. இதை புறக்கணித்து, மாநிலங்களுக்கு இடையே அரசியல் பாகுபாடு காட்டுவது தான் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சியா?
- காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா


'நீங்கள் சொல்லும் புள்ளிவிபரப்படி, காங்., ஆளும் மாநிலங்கள் எத்தனை என சொல்ல முடியுமா; சும்மா கூட்டணி, கூட்டுறவு என பிரித்தாளும் வகையில் கூறக் கூடாது...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை.



கணிதத்தில் காங்., ரொம்ப 'வீக்' ஆக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. அதனால் தான், இதுவரை, 3 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்கிறது. ஆனால், நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் 21.91 சதவீதம் பேர்; நாட்டின் மக்கள் தொகையில், 14.92 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
- பா.ஜ., தேசிய செயலர் சஞ்சு வெர்மா


'அவங்க எதிர்க்கட்சிகாரங்க, அப்படித்தான் பேசுவாக; அவங்க ஆட்சிக்கு வந்தால் தான் தெரியும்; இந்த நேரத்தில் நிர்வாகம் எவ்வளவு கஷ்டம் என்பது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் சஞ்சு வெர்மா அறிக்கை.



கொரோனா கொடுந்தொற்றை அடுத்து, கறும்பூஞ்சை நோய் பெரும் அச்சுறுத்தலாகி வருகிறது. இதன் தாக்குதலுக்கு ஆளாவோர் எளிதில் சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக, இந்த நோயை, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்குமாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்


latest tamil news




'கூட்டணிக் கட்சிக்காரர் ஆயிற்றே; நீங்கள் சொன்ன பிறகு, முதல்வர் தாமதிப்பாரா... 'ஓகே' சொல்லி விடுவார். நம்பிக்கையுடன் இருங்க...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அறிக்கை.



தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் கோவை சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த, பா.ஜ., நண்பர்களே, இந்த கொடுந்தொற்றுக்கு எதிராக, ஸ்டாலின் எடுத்து வரும் தீர்க்கமான நடவடிக்கைகளை போல எடுக்க, மறைவிடத்தை தாண்டி பிரதமர் மோடி வருவாரா?
- கரூர் காங்., - பெண் எம்.பி., ஜோதிமணி


'பிரதமர் எங்கும் பதுங்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் கூட, ஒடிசா, மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், கரூர் காங்., - பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை.



வங்காள யுத்தம், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வெற்றியையும், மோடி - அமித் ஷா ஜோடிக்கு பலத்த தோல்வியையும் பெற்றுத் தந்துள்ளது. இந்த தோல்விக்கு பிறகும், பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தங்கள் தோல்வியை உணரவில்லை. அவர்களுக்கு, 2024 லோக்சபா தேர்தலில் படுதோல்வி கிடைக்கும் வரை அப்படித் தான் இருப்பர்.
- பா.ஜ., முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா


'நீங்கள் சொல்லும் யுத்தத்தில், முதல்வர் மம்தாவின் பெயர் தான் கடுமையாக 'ரிப்பேர்' ஆகியுள்ளது தெரியுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் மத்திய நிதியமைச்சரும், தற்போது மம்தா கட்சியினர், யஷ்வந்த் சின்ஹா அறிக்கை.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X