தேச துரோகம் என்றால் என்ன? வரையறை கேட்கிறது கோர்ட்!

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021
Share
Advertisement
புதுடில்லி: 'தேசத் துரோகம் என்றால் என்ன என்பதை வரையறை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆளும் கட்சி எம்.பி., ரகுராம கிருஷ்ணம் ராஜு, கொரோனா பிரச்னை தொடர்பாக அரசை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவரை, தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் வழக்கு
Supreme Court, SC, Delhi

புதுடில்லி: 'தேசத் துரோகம் என்றால் என்ன என்பதை வரையறை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆளும் கட்சி எம்.பி., ரகுராம கிருஷ்ணம் ராஜு, கொரோனா பிரச்னை தொடர்பாக அரசை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவரை, தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான மேல்முறையீட்டில், ரகுராம கிருஷ்ணம் ராஜுவுக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், ராகுராம கிருஷ்ணம் ராஜுவின் பேட்டியை ஒளிபரப்பிய, இரு, 'டிவி' நிறுவனங்கள் மீது, தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


latest tamil news


இதை எதிர்த்து, 'டிவி5, ஏ.பி.என்.ஆந்திர ஜோதி' ஆகிய டிவி நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. அந்த மனுவில், கொரோனா தொடர்பான குறைகளை கூறும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, ஆந்திர அரசு செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு: தேசத் துரோக குற்றச்சாட்டுகள் வாயிலாக, டிவி நிறுவனங்களை அடக்க ஆந்திர அரசு முயற்சிக்கிறது. எனவே தேசத் துரோகம் என்றால் என்ன என்பதை வரையறை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக இந்த அமர்வு கருதுகிறது. டிவி நிறுவனங்கள் தொடர்பான ஆந்திர அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X