தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டுப்பாடு: ஹாங்காங் அரசு அதிரடி

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஹாங்காங்: கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஹாங்காங் அரசு.ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக புதிதாக யாரும் கோவிட்19 தொற்றுக்கு ஆளாகாத நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவிட் 5வது அலை தாக்குவதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஹாங்காங் அரசு தீவிரமாக

ஹாங்காங்: கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஹாங்காங் அரசு.



latest tamil news



ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக புதிதாக யாரும் கோவிட்19 தொற்றுக்கு ஆளாகாத நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவிட் 5வது அலை தாக்குவதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஹாங்காங் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்குக் கட்டுப்பாடுகளை ஹாங்காங் அரசு விதித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், ஓட்டல்கள், சினிமா அரங்குகள், பொது நிகழ்ச்சிகள், கல்லூரிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



ஹாங்காங்கில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதுவரை 18 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
01-ஜூன்-202111:57:41 IST Report Abuse
S. Narayanan மக்களை காப்பாற்ற இப்படி செய்வது தான் சிறந்தது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-ஜூன்-202110:47:05 IST Report Abuse
Lion Drsekar சித்த ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவமும் மனிதனுக்கு வியாதைகளை போக்குவதற்கு ஆங்கில மருத்துவர்கள் போல் அதே காலங்களில் படித்து வெளியே வரும் சிறந்த நிபுணர்கள் அப்படி இருக்க ஒரு துறையை மட்டும் தூக்கி வைத்து அதற்க்கு மக்களை அடக்குவது தவறு. காது கேட்க்காதவன் காதில் ஊதிய சங்காக இருந்தாலும் நம் கருத்துக்களை கூற வாய்ப்பளித்த தினமலருக்கு நன்றி, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X