உ.பி., நிலவரம்: பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ., பொது செயலர் பிஎல் சந்தோஷ், துணைத்தலைவர் ராதா மோகன் சிங் ஆகியோர் லக்னோவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது வீட்டில் தனியாக சந்தித்து பேசினர். மாநில துணை முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தினர்.இந்த சந்திப்பு வழக்கமாக அமைப்பு
BJP, Bharatiya Janata Party, Uttar Pradesh, பா.ஜ உத்தரபிரதேசம்,

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ., பொது செயலர் பிஎல் சந்தோஷ், துணைத்தலைவர் ராதா மோகன் சிங் ஆகியோர் லக்னோவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது வீட்டில் தனியாக சந்தித்து பேசினர். மாநில துணை முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு வழக்கமாக அமைப்பு ரீதியில் நடப்பது தான் என பா.ஜ., கூறியிருந்தாலும், சட்டசபை தேர்தல் காரணமாக இது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், நிர்வாகிகளுடன் நடந்த சந்திப்பின் போது, அரசியல் கள நிலவரம் மற்றும் ஆட்சி மீதான மக்களின் எண்ணம் குறித்த கருத்துகளை, மேலிட தலைவர்கள் கேட்டறிந்தனர். மேலும், கட்சியில் உள்ள 6 பிராந்திய தலைவர்களான ஷேஷ் நாராயன் மிஸ்ரா, மன்வேந்திர சிங், மோகித் பெனிவல், மகேஷ் சந்திரஸ்ரீவஸ்தவா, தர்மேந்திர சிங் மற்றும் ரஜ்னிகாந்த் மகேஷ்வரி ஆகியோரிடமும் நிலவரங்களை கேட்டறிந்தனர். மேலும் மாநில அமைச்சர்கள் சிலரையும் தனித்தனியே சந்தித்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.


latest tamil news


இந்த கூட்டம் தொடர்பாக மாநில பொது செயலர் நாராயன் சுக்லா கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், நிர்வாகிகள் அதிகளவு மக்களை சந்திக்க வேண்டும். ஊரகம் மற்றும் நகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்துவதற்காக மாநில அரசுகளுக்கு உதவ மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை தொடர்பாக பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் கட்சி சார்பில் செய்யப்பட்ட கொரோனா நிவாரண பணிகள் குறித்து சந்தோஷ் மற்றும் ராதாமோகன் சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
02-ஜூன்-202106:30:22 IST Report Abuse
Kalyan Singapore மாட்டு கோமியம் குடிக்கும் போட்டோ தானே மாட்டுக்கறி உண்ணும் போட்டோ அல்லவே வளம் வந்து கொண்டிருக்கிறதா அல்லது வலம் வந்துகொண்டிருக்கிறதா ? தமிழ் வளர்த்த ஊர் தஞ்சாவூரிலிருநதா இப்படி ?
Rate this:
Cancel
T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா
02-ஜூன்-202104:37:00 IST Report Abuse
T.SRINIVASAN தமிழர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கங்கையில் பிணம் மிதந்து செல்வதை வாரணாசியில் காணலாம். இது சாதாரண நிகழ்வு. மோடியின் தூய்மையான கங்கை திட்டம் நடைமுறைப்படுத்த பின் இது சற்றே குறைந்தது. இந்த கொரோனாவில் இறந்த உடல்களை குழியில் வீசியதை நாம் கண்டோம் இங்கு. அதைப் போலத்தான் உபியில் நடந்தது.எப்படி தமிழக மக்களுக்கு ஊழல் ஒரு பொருட்டே இல்லையோ அது போல கங்கையில் சடலம். திராவிடர்களுக்கு உபியில் ஓட்டு கிடையாது. ஆகையால் நிம்மதி
Rate this:
Cancel
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-202100:57:22 IST Report Abuse
Raj எப்பொழுதும் எலெக்ட்ஷன் தானா இவர்களுக்கு. மக்கள் கொரோனாவினால் காஞ்சி போய்விட்டார்கள். இவர்களுக்கோ தினமும் பார்ட்டி தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X