கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தங்கத்திற்காக ரூ.26 லட்சம் கொள்ளை: நடவடிக்கை கோரி வழக்கு

Added : ஜூன் 01, 2021
Share
Advertisement
மதுரை: தங்கத்திற்காக நகை வியாபாரியிடம் திருச்சியில் ரூ.26 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த வழக்கு விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சென்னை சூளையைச் சேர்ந்தவர் பாலாஜி. தங்க நகை வியாபாரம் செய்கிறார். திருச்சி விமான நிலைய சுங்க அலுவலகத்தில் தெரிந்தவர் இருப்பதாகவும், அவர் மூலம் பில் போட்டு குறைந்த விலைக்கு தங்கம்

மதுரை: தங்கத்திற்காக நகை வியாபாரியிடம் திருச்சியில் ரூ.26 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த வழக்கு விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை சூளையைச் சேர்ந்தவர் பாலாஜி. தங்க நகை வியாபாரம் செய்கிறார். திருச்சி விமான நிலைய சுங்க அலுவலகத்தில் தெரிந்தவர் இருப்பதாகவும், அவர் மூலம் பில் போட்டு குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகவும் பாலாஜியிடம் சிலர் தெரிவித்தனர். பாலாஜி நண்பர்களுடன் 2017ல் திருச்சி சென்றார். அவர்களைச் சந்தித்த ஒருவர் தங்க பிஸ்கட்டை காண்பித்தார். உங்களுக்கு எவ்வளவு தேவை என கேட்டார். பாலாஜி, '1 கிலோ தங்கம் தேவை,' என்றார்.

அந்நபர், 'ரூ.26 லட்சம் வேண்டும்,' என கூறிவிட்டு விமான நிலையம் நோக்கிச் சென்றார். பின் அந்நபர் சுங்கத்துறை அலுவலகத்தில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் எனக்கூறி காரில் பாலாஜி மற்றும் அவரது நண்பரை அழைத்துச் சென்றார். பணம் இருந்த பையை வாங்கிக் கொண்டார். கார் புதுக்கோட்டை ரோட்டில் சென்றது. வழியில் காரை நிறுத்திய சிலர் சோதனை செய்ய வேண்டும் என்றனர். அதே காரில் ஏறிக்கொண்டனர். பாலாஜியை தாக்கி, மிரட்டினர். அவரை கீழே இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பினர்.

திருச்சி விமான நிலைய போலீசில் பாலாஜி புகார் செய்தார். அவர், 'ஏமாற்றுதல், காயம் ஏற்படுத்துதல், மிரட்டல், கொள்ளையடித்தல் பிரிவுகளில் போலீசார் 2017ல் வழக்குப் பதிந்தனர். இதுவரை நடவடிக்கை இல்லை. விசாரணையை விரைவுபடுத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்,' என உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி ஜி.இளங்கோவன் உத்தரவு: போலீசார் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X