அரசல்... புரசல்... அரசியல்: மோசடி புகார் அதிகாரிக்கு முக்கிய பதவி!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல்... புரசல்... அரசியல்: மோசடி புகார் அதிகாரிக்கு முக்கிய பதவி!

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (15)
Share
சென்னை: தி.மு.க., அரசு பதவி ஏற்றதும், வீட்டு வசதி வாரியத் தலைவரா இருந்த கார்த்திகேயனை, நெடுஞ்சாலைத் துறை செயலரா நியமிச்சாங்க...அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகராட்சி கமிஷனரா இருந்த கார்த்திகேயன் மூலமா தான், அமைச்சரா இருந்த வேலுமணி, ஸ்மார்ட் சிட்டி தொடர்பான டெண்டர்களில் மோசடி செய்தார்னு, குற்றம்சாட்டினாங்க...அதுக்கு உடந்தையா இருந்ததாக கார்த்திகேயனை எதிர்த்து, ஸ்டாலின்
அரசல்_புரசல்_அரசியல்,  மோசடி புகார், அதிகாரி, முக்கிய பதவி, கார்த்திகேயன்,

சென்னை: தி.மு.க., அரசு பதவி ஏற்றதும், வீட்டு வசதி வாரியத் தலைவரா இருந்த கார்த்திகேயனை, நெடுஞ்சாலைத் துறை செயலரா நியமிச்சாங்க...

அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகராட்சி கமிஷனரா இருந்த கார்த்திகேயன் மூலமா தான், அமைச்சரா இருந்த வேலுமணி, ஸ்மார்ட் சிட்டி தொடர்பான டெண்டர்களில் மோசடி செய்தார்னு, குற்றம்சாட்டினாங்க...

அதுக்கு உடந்தையா இருந்ததாக கார்த்திகேயனை எதிர்த்து, ஸ்டாலின் அப்போ அறிக்கையும் வெளியிட்டார்... ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அதே அதிகாரியை முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத் துறையில் நியமிச்சாங்க...


latest tamil news



அது, சலசலப்பை ஏற்படுத்தியதால், கார்த்திகேயனை உயர் கல்வித் துறைக்கு செயலரா நியமிச்சிட்டாங்க... குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிக்கே முக்கிய பதவியா என, கோட்டை வட்டாரத்துல பரபரப்பா பேசுறாங்க ...!


கொந்தளித்த தி.மு.க., ஆதரவு பி.ஆர்.ஓ.,க்கள்!



அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் துாக்கியடிக்கப்பட்ட செய்தி விளம்பரத் துறையில் பணியாற்றிய, தி.மு.க., ஆதரவு பி.ஆர்.ஓ.,க்கள், ஏ.பி.ஆர்.ஓ.,க்களுக்கு இன்னும் பணி மாறுதல் வழங்கப்படாத நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் உதவியாளரா இருந்த, அ.தி.மு.க., ஆதரவாளரான, பி.ஆர்.ஓ., ரவிச்சந்திரன், திருச்சி மாவட்ட பி.ஆர்.ஓ.,வா நியமிக்கப்பட்டார்... அமைச்சர் நேரு தான் பரிந்துரை செய்தாராம்...

இது, தி.மு.க., ஆதரவு பி.ஆர்.ஓ.,க்களை டென்ஷனாக்கியது... இந்த விவகாரத்தை, தி.மு.க., மேலிடத்துக்கு கொண்டு போனாங்க... உடனடியா, திருச்சி மாவட்ட பி.ஆர்.ஓ.வாக நியமிக்கப்பட்ட ரவிச்சந்திரன், அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்...!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X