12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

Updated : ஜூன் 01, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் 2வது அலை காரணமாக, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி

புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் 2வது அலை காரணமாக, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



முன்னதாக, இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. அப்போது, பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி 'ஜூலை 15 - ஆக., 26க்குள் தேர்வுகளை நடத்தி, செப்டம்பரில் முடிவுகளை வெளியிடலாம்' என, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



எனினும் கோவிட் தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வந்த நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வரும் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும்' என, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. .
இந்நிலையில் பிளஸ்டூ தேர்வுகளை ரத்து செய்யலாமா ,வேண்டாமா என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள், அமித்ஷா பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத்தேர்வை நடத்த மாற்று வழி உண்டா என்பது குறித்தும், மாநிலங்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ கருத்துக்களையும், பிரதமர் ஆய்வு செய்தார்.


latest tamil news




12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து


கூட்டத்தின் முடிவில், கோவிட் சூழல் மற்றும் மாணவர்களின் உடல் நலம் பாதுகாப்பு முக்கியம் என கருதி,12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 12 வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கர்ணன், கர்மபுரம், கேடு கெட்ட நாடு இந்தியா 2014 முதல் நடக்கும் நம்ம மான் கீ பாத்து ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒரே உருப்படியான முடிவு இது மட்டும் தான்....
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூன்-202121:28:02 IST Report Abuse
Ganesh இப்போ மாநில அரசுக்கு தான் பிரச்சினை. நீட் தேர்வு நடத்த கூடாது என்று சொன்னால் இவர்கள் 2 தேர்வு நடத்தியே ஆகவேண்டும். அப்படி நடத்தவில்லை என்றால் எந்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று கோர்ட் கேள்வி கேட்கலாம். நீட் தேர்வு நடத்தினால் மக்கள் கேள்வி கேட்பார்கள்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
01-ஜூன்-202121:15:29 IST Report Abuse
A.George Alphonse பாவம், மாணவர்கள்.கொரோன இவர்களின் எதிர் காலத்தையும் விரயம் செய்து வேடிக்கை பார்க்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X