பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசிக்கு ஒப்புகைச்சீட்டு கோவையில் புது நடைமுறை

Added : ஜூன் 01, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு, இரண்டாவது டோஸ் எப்போது போட வேண்டும் என்கிற குறிப்புடன், ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகிறது.கொரோன தடுப்பூசி 18 முதல், 44 வயதுக்கு உட்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் என, இரு பிரிவாக பிரித்து, தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள், 28 நாட்களுக்கு பின், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள
 தடுப்பூசிக்கு ஒப்புகைச்சீட்டு கோவையில் புது நடைமுறை

கோவை:கோவையில், கொரோனா தடுப்பூசி போடுவோருக்கு, இரண்டாவது டோஸ் எப்போது போட வேண்டும் என்கிற குறிப்புடன், ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகிறது.

கொரோன தடுப்பூசி 18 முதல், 44 வயதுக்கு உட்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் என, இரு பிரிவாக பிரித்து, தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள், 28 நாட்களுக்கு பின், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள், 84 நாட்களுக்கு பிறகே, இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், கோவிஷீல்டு மருந்து செலுத்தியவர்களில் ஏராளமானோர், ஒரு மாதம் கழிந்ததும், முகாமுக்கு வந்து வாக்குவாதம் செய்கின்றனர்.கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சித்திக், வீரராகவ ராவ் கள ஆய்வு சென்ற போது, தடுப்பூசி முகாம்கள் நடந்த இடங்களில், மக்களுடன் உரையாடினர். சிலருக்கு என்ன ஊசி போட்டார்கள் என்பேதே தெரியவில்லை.

இதையடுத்து, ஒவ்வொருவருக்கும் ஒப்புகைச்சீட்டு வழங்க உத்தரவிட்டனர்.பயனாளி பெயர், வயது, தடுப்பூசி பெயர், முதல் டோஸ் செலுத்திக் கொண்ட தேதி, இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டிய தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு, கோவை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் நேற்று முதல் ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X