இந்தியாவில் கண்டறியப்பட்ட வைரசின் பெயர் 'கப்பா... டெல்டா!'

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
நியூயார்க் :முதன்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்ட, பி.1.617.1 மற்றும் பி.1.617.2 ஆகிய இருவகை கொரோனா வைரஸ்களுக்கு, முறையே, 'கப்பா' மற்றும் 'டெல்டா' என, கிரேக்க மொழியால் ஆன பெயர்களை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. புதிய வகை உருமாறிய வைரசை, அது கண்டறியப்பட்ட நாட்டின் பெயருடன் சேர்த்து அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.கடந்த, 2019
இந்தியா, வைரஸ்,கப்பா, டெல்டா, உலக சுகாதார அமைப்பு

நியூயார்க் :முதன்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்ட, பி.1.617.1 மற்றும் பி.1.617.2 ஆகிய இருவகை கொரோனா வைரஸ்களுக்கு, முறையே, 'கப்பா' மற்றும் 'டெல்டா' என, கிரேக்க மொழியால் ஆன பெயர்களை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.

புதிய வகை உருமாறிய வைரசை, அது கண்டறியப்பட்ட நாட்டின் பெயருடன் சேர்த்து அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த, 2019 டிசம்பரில், சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது; பின், பல்வேறு நாடுகளுக்கும் பரவ துவங்கியது.'கோவிட் - 19' என அழைக்கப்பட்ட இந்த தொற்றை, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'சீன வைரஸ்' என்றே குறிப்பிட்டார். இதனால், சீனா ஆத்திரமடைந்தது.


முற்றுப்புள்ளிஇந்த தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவ துவங்கிய உடன், உருமாற்றம் அடைந்தது. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு மாற்றங்களுடன் கூடிய வைரஸ்கள்கண்டறியப்பட்டன.இதற்கு ஆய்வாளர்கள், தங்கள் வசதிக்காக, எண்களுடன் கூடிய அறிவியல் பெயர்களை சூட்டினர்.நாளடைவில், உருமாற்றம் அடைந்த வைரஸ் எந்த நாட்டில் முதன் முதலாக கண்டறியப்பட்டதோ, அந்த நாட்டின் பெயருடன் சேர்த்து, அந்த வைரசை குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது; இது, சம்பந்தப்பட்ட நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்தது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட வைரஸ் வகை, பி.1.617.1 என அழைக்கப்படுகிறது. சமீபத்திய இரண்டாவதுஅலையின்போதுகண்டறியப்பட்ட வகை, பி.1.617.2 என அழைக்கப்படுகிறது.இதை, 'இந்திய வகை வைரஸ்' என, சில வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட துவங்கின. இதற்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.'புதிய வகை வைரசை, அது கண்டறியப்பட்ட நாட்டின் பெயரை சேர்த்து குறிப்பிட கூடாது' என, தெரிவித்தது.இந்நிலையில் உருமாற்றம் அடையும் வைரஸ்களுக்கு, கிரேக்க மொழியிலான பெயர்களை சூட்டி, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, உலகசுகாதார நிறுவனம் முடிவு செய்தது.


பெயரிடல்அந்த வகையில், இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட, பி.1.617.1 வகை வைரசுக்கு, 'கப்பா' என்றும், இரண்டாவது அலையில் கண்டறியப்பட்ட பி.1.617.2 வகை வைரசுக்கு, 'டெல்டா' என்றும் உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது.இது குறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது:ஐரோப்பிய நாடான பிரிட்டனில் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரசுக்கு, 'ஆல்பா' என்றும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட வைரசுக்கு, 'பீட்டா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கண்டறியப்பட்ட, பி.1 வகை, 'காமா' என்றும், பி.2 வகை, 'ஸீடா' என்றும் அழைக்கப்படுகின்றன.அமெரிக்க வகை வைரஸ்கள், 'எப்சிலான்' மற்றும் 'லோட்டா' என அழைக்கப்படுகின்றன.இந்தியாவில் கண்டறியப்பட்ட, பி.1.617.1 மற்றும், பி.1.617.2 ஆகியவற்றுக்கு, 'கப்பா, டெல்டா' என பெயரிடப்பட்டுள்ளன.


களங்கம்வைரஸ் குறித்து பேசும்போது, எந்த நாட்டுக்கும் களங்கம் ஏற்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால், பெயர் சூட்டும் முறை பின்பற்றப்படுகிறது.மற்றபடி, ஆராய்ச்சி பணிகளுக்கு, வைரசின் அறிவியல்பூர்வமான பெயர்களே தொடர்ந்து பயன்படுத்தப்படும். பொது விவாதங்கள் மற்றும் செய்திகளில் குறிப்பிடும் போது, இந்த புதிய பெயர்களை சொல்லி அழைப்பதே சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூன்-202111:54:17 IST Report Abuse
Sriram V What action you are going to take against bio terroristan who are still spreading it by manipulating same. They are using it against their competitors, now Chinese manipulated the virus using terroristan in Vietnam because they are attracting the fresh investment which was inted for China. WHO wake up.
Rate this:
Cancel
Mithun - Bengaluru,ஓமன்
02-ஜூன்-202110:01:28 IST Report Abuse
Mithun சீனனின் கைக்கூலி அமைப்பு. மெல்ல மெல்ல சீனனின் பெயரை மறக்கடிக்க புது யுக்தி.
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
02-ஜூன்-202109:25:43 IST Report Abuse
rajan கப்பா டெல்டா என்று பெயர் வைத்ததற்கு பதிலாக மோடி அமித்ஷா என்று பெயர் வைத்தால் மோடியையும் அமித்ஷாவையும் காணப்படுத்தினது போல இருக்கும்
Rate this:
Sriram Narashum L - Jamnagar,இந்தியா
02-ஜூன்-202114:24:55 IST Report Abuse
Sriram Narashum L... பப்பு கூட பொருத்தி பார்க்க . இவைகள் தான் நாட்டிற்கு தீங்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X