பொய் சொல்கிறார் மம்தா பானர்ஜி: குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி :'புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியுள்ள கருத்துகள் அனைத்தும் பொய்' என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. மம்தா கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், வரிக்கு வரி, தெளிவாக மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர
மம்தா பானர்ஜி ,குற்றச்சாட்டு, மத்திய அரசு, பதிலடி

புதுடில்லி :'புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியுள்ள கருத்துகள் அனைத்தும் பொய்' என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. மம்தா கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், வரிக்கு வரி, தெளிவாக மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஆய்வு செய்தார். ஒடிசாவில் முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக்குடன்அவர் ஆலோசனை நடத்தினார்.

மேற்கு வங்கம் சென்ற அவர் நடத்தவிருந்த ஆய்வு கூட்டத்தை, முதல்வர் மம்தா பானர்ஜியும், தலைமைச் செயலராக இருந்த அலபன் பந்தோபாத்யாயும் புறக்கணித்தனர்.தான் அவமானபடுத்தப்பட்டதாகவும், காக்க வைக்கப்பட்டதாகவும், பிரதமரின் அனுமதி பெற்றே ஏற்கனவே திட்டமிட்ட பயணத்தை மேற்கொண்டதாகவும், மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி கூறியுள்ள கருத்துகளுக்கு, மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. அதன் விபரம்:

மம்தா : பிரதமரின் அனுமதி பெற்றே, ஏற்கனவே திட்டமிட்ட பயணத்தை மேற்கொண்டேன்.

மத்திய அரசு: பிரதமரிடம் அவர், எந்த அனுமதியும் பெறவில்லை.

மம்தா : ஆய்வு கூட்டம் குறித்தும், பிரதமர் பயணம் குறித்தும் தாமதமாக தகவல் வந்தது.

மத்திய அரசு: புயல் வந்த பின்தானே, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய முடியும்.

மம்தா: பிரதமரின் வருகைக்காக விமான நிலையத்தில் என்னை காக்க வைத்தனர்.

மத்திய அரசு: விமான நிலையத்துக்கு பிரதமர், மதியம் 1:59 மணிக்கு வந்தார். மம்தா, மதியம் 2:10க்கு வந்தார். இதை திரிணமுல் எம்.பி.,யே சமூக வலைதளத்தில்
பதிவிட்டுள்ளார்.

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மம்தா 1,500 அடி துாரத்தில் உள்ள கூட்டம் நடந்த அறைக்கு நடந்து வந்தார். பிரதமரை சந்தித்த அவர் 2:35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார். பிரதமர் புறப்படுவதற்கு முன்பாகவே, மரபுகளை மீறி மம்தா சென்றார். அவர் காக்க வைக்கப்பட்டார் என்பது தவறான தகவல்.

பிரதமர் தலைமையிலான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதாக மம்தா கூறியிருந்தார். ஆனால், விமான நிலையத்தில், தன் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி இருப்பதை பார்த்ததும், முடிவை மாற்றியுள்ளார். அதனால் கூட்டத்தில் பங்கேற்காமல் வெளியேறினார்.

மம்தா: பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக என் ஹெலிகாப்டர், வானில், 20 நிமிடங்கள் சுற்றி வர நேர்ந்தது.

மத்திய அரசு: பிரதமரின் பயணம் திட்டமிட்ட நேரப்படி அமைந்தது. மற்றவர்கள் முன்னதாக வந்தபோது, முதல்வர் ஏன் முன்னதாகவே வரவில்லை?

மம்தா: அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனேயே, தலைமைச் செயலரை மத்திய அரசு பணிக்கு திருப்பி அழைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மத்திய அரசு: தலைமைச் செயலர், அனைத்திந்திய சேவை அதிகாரி. அவர் தன் கடமையை செய்யத்தவறிவிட்டார். புயல் பாதிப்பு குறித்து பிரதமருக்கு அவர் விளக்கத் தவறிவிட்டார். மேற்கு வங்க உயரதிகாரிகள் இல்லாததால், ஆய்வு கூட்டம் ரத்து செய்ய வேண்டியதாயிற்று.
அதனால் தான், அவரை திரும்ப அழைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இவ்வாறு மம்தாவின் கருத்துகளுக்கு, மத்திய அரசு வட்டாரங்கள்விளக்கம் அளித்துள்ளன.


அகங்காரம் வேண்டாம் கவர்னர் ஆவேசம்மத்திய அரசுடனான மம்தாவின் மோதல் போக்கு குறித்து, மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் கூறியதாவது: 'யாஸ்' புயல் ஆய்வு கூட்டத்துக்கு முதல் நாள் இரவே, என்னுடன் அவசரமாக பேச வேண்டும் என, மம்தா பானர்ஜி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதன்பின், பிரதமருடனான ஆய்வு கூட்டம் நடக்கும் அன்று, 'சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி பங்கேற்றால், கூட்டத்தை புறக்கணிப்பேன்' என, தொலைபேசியில் தெரிவித்தார். மக்கள் பணியாற்ற வேண்டிய நேரத்திலும், அவரது அகங்காரமே மேலோங்கி உள்ளது. இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


'மாஜி'க்கு 'நோட்டீஸ்'மத்திய அரசு பணிக்கு திரும்பும் உத்தரவை மீறிய, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாய்க்கு, பேரிடர் நிர்வாக சட்டத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. மூன்று நாட்களுக்குள் இதற்கு பதிலளிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவருக்கு சமீபத்தில் தான், மூன்று மாத பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மத்திய அரசு பணிக்கு திரும்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.ஆனால், நேற்று முன்தினம் அவர் ஓய்வு பெற்றதாகவும், மேற்கு வங்க அரசின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மம்தா அறிவித்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-202122:26:28 IST Report Abuse
Pugazh V பீஜேபீ அரசு... ஸாரி..ஸாரி..ஆர்எஸ்எஸ் அரசு அவமானப்பட்டு நிற்கிறது. 300 எம்.பிக்கள் இருப்பதால் ஓவரா ஆடக் கூடாது. பீஜேபீ காசு குடுத்து வாங்கிய தி. காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் பீஜேபீ யிடமிருந்து விலகுகிறார்கள். அல்லது காண்ட்ராக்ட் முடிந்து துரத்தப்படுகிறார்கள். பிரதமர் பிரதமர் மாதிரி நடந்து கொள்ள வேண்டும். வட்ட செயலாளர் மாதிரி நடந்து கொண்டால்???
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஜூன்-202120:53:56 IST Report Abuse
Lion Drsekar மீண்டும் ஒரு வல்லபாய் படேல் வந்தால்மட்டுமே ஜனநாயகம் பிழைக்கும், சுதந்திரம் அடைத்தபோது மன்னர்களை ( பாவம் சட்டமே தெரியாத அவர்களை மிரட்டி கையொப்பம் வாங்கி அபகரித்த நிகழ்வு இப்போது நடக்காது, ஊருக்கு ஒரு அமைப்பு,ம் ... எல்லாமும் இருப்பதால் தலைமை நீதிமன்றம் எல்லாம் இருப்பதால் அவ்வளவு எளிதில் மீண்டும் வல்லபாய் படேல் வந்தாலும் நடக்காது, மக்களுக்கு நன்மை செய்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக காந்தியே பிறந்தாலும் அவர்மீதும் பல வழக்குகளை போட்டு ஒரு சிறைச்சாலை பாக்கி இல்லாமல் ... திரைப்படங்களில் எல்லாமே காட்டிவிட்டார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
02-ஜூன்-202119:24:02 IST Report Abuse
Elango மேற்கு வங்க தேர்தலில் மத்தியில் ஆளும் பிஜேபி செய்த சேட்டைகள் ஏராளம் அதற்கு தான் இப்ப வச்சு செய்றாங்க மம்தா.... நல்லா வச்சு செய்யணும் பிஜேபியை இருந்தாலும் திருந்த மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X