பொது செய்தி

இந்தியா

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு நேற்று அறிவித்தது. தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை போக்கவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக,
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2, பொதுத்தேர்வு, ரத்து

புதுடில்லி: மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு நேற்று அறிவித்தது. தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை போக்கவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. அப்போது, பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.


பங்கேற்பு



வைரஸ் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில கல்வி அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மாநிலங்கள், 'பாதுகாப்பான முறையில் தேர்வுகளை நடத்தலாம்' என, தெரிவித்தன.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, டில்லியைச் சேர்ந்த மம்தா சர்மா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பதில் மனு தாக்கல் செய்ய, 3ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கோரியது.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்


கவலை



அப்போது, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து, மாநில அரசுகள் உட்பட, பல்வேறு தரப்பினரும் தெரிவித்த கருத்துக்களை, பிரதமரிடம் அதிகாரிகள் விரிவாக விளக்கினர். கூட்டத்தின் முடிவில், பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த உத்தரவு குறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம்; அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெரியாமல், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கவலை நிலவுகிறது; அதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.


latest tamil news



பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பாக தோன்றவில்லை.எனவே, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்வதாக, கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சிலும், தங்கள் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


இன்று முதல்வர் ஆலோசனை



'தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படாது; கட்டாயம் நடத்தப்படும்' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் உறுதியாக கூறி வந்தார்.இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நேற்று ஆலோசனை நடந்தது. அப்போது, மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்ற வழக்கின் உத்தரவுக்கு ஏற்ப, தமிழக அரசும் முடிவெடுக்கலாம் என, தீர்மானிக்கப்பட்டது.


பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார்



இந்நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக, பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா; ரத்து செய்வதா என, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று ஆலோசனை நடக்க உள்ளது. இதில், இறுதி முடிவு அறிவிக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
02-ஜூன்-202116:34:51 IST Report Abuse
Ellamman நீட் தேர்வுக்கு கூட இது போல அறிவிப்பு செய்ய மோடிக்கு துணிவு உண்டா??
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
02-ஜூன்-202116:21:20 IST Report Abuse
Rengaraj இந்த கல்வி ஆண்டு மிகவும் வித்யாசமான ஆண்டாக அணைத்து பிளஸ் 2 மாணவர்களுக்கும் அமைந்துவிட்டது. ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டது. கொரோனா இல்லாமல் இருந்திருந்தாலும் கூட முழு ஆண்டு தேர்வு நடத்தப்பட்டிருப்பின் அதில் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்திருக்கும். குறிப்பாக சிறிய நகர மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நிலை அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து என்பது மற்ற மாநிலங்கள் தத்தம் மாநில கல்வி தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறையில் மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக இருக்கும். ஒருவேளை கொரோனா மூன்றாவது அலை என்ற ஒன்று வருமானால் அது இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தாக்கலாம். அதற்குள் இது சம்பந்தமாக நாடு தழுவிய முறையில் ஒரு பொது மதிப்பீடு நோக்கி முன்னேற ஏதுவாக இருக்கும்.உயர்கல்வியில் சேர்வதற்கும் தேர்வையான தேர்வுகளை நடத்தி முடித்து விடலாம். தேர்வு நடத்தலாம் என்று நினைத்திருந்தால் ஆகஸ்ட் மாதம் அணைத்து தேர்வுகளும் நடத்த வேண்டும். முடிவுகள் அறிவித்து உயர்கல்வியில் சேர நவம்பர் அல்லது டிசம்பர் ஆகி விடும். அப்போது மூன்றாவது அலை வருமானால் மாணவர்களின் ஒரு ஆண்டு கல்வி வீணாகி விடும். அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வருகிறது. மாணவர்களின் தேர்வு சம்பந்தமான முடிவு தேர்தலில் எதிரொலிக்கும். அதுவும் இப்போது தவிர்க்கப்பட்டு இருக்கிறது. அரசியல் நோக்கிலும் பா,ஜா.க ஆளும் மாநிலங்களிலும் கூட்டணி இது ஆளும்கட்சிக்கு சாதகமான பலனை தரும்.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
02-ஜூன்-202117:13:08 IST Report Abuse
Ellammanகட்சிக்கு சாதகத்தை எல்லாவற்றிலும் பார்க்கும்.. மாணவர்களின் எதிர்காலம்... அத பற்றி கவலை பட என்ன வேண்டி இருக்கு... இந்த மாணவர்கள் எதிர்காலத்தை பத்தி கேள்வி வரும் போது பீஜேபி ஆட்சியில் இருக்காதே... நேருவை கைகாட்டி எஸ்கேப்....
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
02-ஜூன்-202112:36:01 IST Report Abuse
ramesh ராம்குமார் ஆதித்தன் பாஸ் போட்டதை எதிர்த்து உச்ச நீதி மன்றம் செல்வாரா ......இவரால் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை கேள்வி குறி ஆனதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X