பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிவாரண நிதி: தொழில் நிறுவனங்கள் தாராளம்

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை :கொரோனா நோய் தடுப்பு பணிக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, ஏராளாமானோர் நிதியுதவி வழங்கினர்.நிதியுதவி வழங்கியவர்கள் விபரம்:'அசோக் லேலேண்ட்' நிறுவனத்தின், மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி பாலசந்தர், ௩ கோடி ரூபாய்க்கான காசோலை. லேலேண்ட் தொழிற்சாலைகள் அமைந்துள்ள, ஓசூர், எண்ணுார், மணலி, நாமக்கல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, ௨ கோடி ரூபாய் மதிப்புள்ள,
முதல்வர் ,நிதி: தொழில் நிறுவனங்கள் ,தாராளம்

சென்னை :கொரோனா நோய் தடுப்பு பணிக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, ஏராளாமானோர் நிதியுதவி வழங்கினர்.

நிதியுதவி வழங்கியவர்கள் விபரம்:'அசோக் லேலேண்ட்' நிறுவனத்தின், மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி பாலசந்தர், ௩ கோடி ரூபாய்க்கான காசோலை. லேலேண்ட் தொழிற்சாலைகள் அமைந்துள்ள, ஓசூர், எண்ணுார், மணலி, நாமக்கல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, ௨ கோடி ரூபாய் மதிப்புள்ள, மருத்துவ உபகரணங்கள் அளிப்பதற்கான கடிதம் ஆகியவற்றை வழங்கினர்.

சென்னை லயோலா கல்லுாரி சார்பில், இயேசு சபை மாநில தலைவர் ஜெபமலை ராஜா, பாதிரியார் ஜோ அருண் ஆகியோர், 30 லட்சம் ரூபாய்.ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் மற்றும் நிர்வாகிகள், ௧ கோடி ரூபாய்; அடையாறு ஆனந்தபவன் குழுமத்தின் மேலாண் இயக்குனர் வெங்கடேசன், 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.

இறால் வளர்ப்போர் சங்க நிர்வாகிகள், 45.66 லட்சம்; அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், 43.53 லட்சம்.கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 50 லட்சம்; மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ௧ கோடி ரூபாய்; ஆற்காடு இளவரசர் முகமதுஅப்துல் அலி, ௧ கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குருசங்கர் சார்பில், அதன் நிர்வாகி கண்ணன், 25 லட்சம் ரூபாய்; 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான, ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்குவதற்கான கடிதத்தை வழங்கினார்.
அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிவபத்மநாபன், இணை இயக்குனர் அனுராதாகுமார் ஆகியோர், 50 லட்சம் ரூபாய்; சன்மார் குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் விஜய்சங்கர் மற்றும் நிர்வாகிகள், 1.50 கோடி.

பீமா ஜூவல்லர்ஸ் மேலாண் பங்குதாரர் சுதீர்கபூர், 50 லட்சம்; டி.டி.கே., குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் ரகுநாதன் மற்றும் நிர்வாகிகள், ௧ கோடி ரூபாய்க்கான காசோலைகளை,
முதல்வரிடம் வழங்கினர்.

ரானே குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் ஹரிஷ் லட்சுமணன், ௧ கோடி ரூபாய்; வி.வி.டி., சன்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் நிரஞ்சன் கனி, 25 லட்சம்.
அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் வணிகத் தலைவர் பாலசுப்பிரமணியம், யூனிட் தலைவர் தாமஸ் மேத்யு ஆகியோர், ௨ கோடி ரூபாய்க்கான காசோலையை, முதல்வரிடம் வழங்கினர்.வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஐசரிகணேஷ், ௧ கோடி ரூபாய்; தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு மற்றும் நிர்வாகிகள், 75 லட்சம்; சென்னை ஓட்டல்கள் சங்கம் சார்பில், தலைவர் ரவி, 75 லட்சம்.

தமிழ்நாடு வேளாண் மை பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள், 50 லட்சம்; பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் சார்பில், சங்க நிர்வாகிகளுடன், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.
இயேசு ஊழியங்கள் நிர்வாகி, சாது சுந்தர் செல்வராஜ், 55 லட்சம் ரூபாய்; தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை சார்பில், காஜா முயீனுத்தீன் பாகவி, 24.20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
03-ஜூன்-202100:14:35 IST Report Abuse
Mohan அய்யா முதல்வர் அய்யா, இந்த மாதிரி பெரிய பணக்கார முதலாளிகளிடம் நன்கொடை வாங்குவது எங்களுக்கு பயமா இருக்கு. போட்டத உங்க மூலமாக எடுக்கத்தான் பார்ப்பாங்க. ஒரு வகையில் நாங்களும் பாதிக்கபடுவோம். இந்த 180, 200, கோடி எல்லாம் ஜுஜுபி. நாங்க எல்லாம் மொத்தமா 900 கோடி. கொடுக்கிறோம் ஒரு ரெண்டு நாள் டாஸ்மாக் கடையை திறந்து விட்டு பாருங்க.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-202122:33:15 IST Report Abuse
Pugazh V How is this different from PM Care? It is simple. PM care is a looting by bjp. Cheating people by saying that pm cares is govt. and corrected money. When asked details, it said, it is private corporate, they need not give details. But, what Mr. Stalin takes is for the public, by the public, from the public and to the public. Are you clear now? Good. Thank you
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-202122:29:37 IST Report Abuse
Pugazh V அடிமைக் கூட்டத்துக்கு வயிறெரிகிறது போல. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைநிமிர்ந்து நிற்கத் துவங்கும் தமிழகம் பார்த்து நிஜமான தீயசக்தி களும் தமிழக விரோத சக்தி களும் வயத்தெரிச்சல் தாங்காமல் புலம்புகிறார்கள். புடிக்கலியா லன்னா..கிளம்பு..உ.பி. குஜராத் ராஜஸ்தான் இப்படி எங்கியாவது கிளம்பு..காத்து வரட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X