ஊரடங்கு நீட்டிக்கப்பட மாட்டாது: ஸ்டாலின் சூசகம்! | Dinamalar

ஊரடங்கு நீட்டிக்கப்பட மாட்டாது: ஸ்டாலின் சூசகம்!

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (54) | |
சென்னை : தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட மாட்டாது என்பதை முதல்வர் ஸ்டாலின் சூசகமாக, நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். 'ஊரடங்கை நீட்டித்து கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும், மக்களாகி உங்கள் கையில் தான் உள்ளது. கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றுங்கள்; தற்காத்துக் கொள்ளுங்கள்' என,
lockdown, curfew, CM Stalin, ஊரடங்கு, நீட்டிப்பு இல்லை,  ஸ்டாலின்

சென்னை : தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட மாட்டாது என்பதை முதல்வர் ஸ்டாலின் சூசகமாக, நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

'ஊரடங்கை நீட்டித்து கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும், மக்களாகி உங்கள் கையில் தான் உள்ளது. கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றுங்கள்; தற்காத்துக் கொள்ளுங்கள்' என, பொதுமக்களுக்கு, முதல்வர் அறிவுரை கூறியுள்ளார்.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பரவல் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தையும் கடந்தது; இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

எனவே, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை, தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது; இதற்கு, ஓரளவு பலன் கிடைத்தது.கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறையத் துவங்கியது. நோய் பரவலை மேலும் கட்டுப்படுத்த இம்மாதம் 7ம் தேதி காலை வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


முழு ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. ஆனால், முழு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.இதை முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

வீடியோ பதிவில், அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து தான் மற்றொருவருக்கு பரவுகிறது. அதனால், தொற்று தங்கள் மீது பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே, கொரோனாவை தடுக்க முடியும்.

கடந்த 24ம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அது, மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

சென்னையில் 7,000 வரை எட்டிய பாதிப்பு, இப்போது 2,000 ஆக குறைந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில், முழுமையாக குறைந்து விடும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரம் அதிகமாகியது. அங்கும், இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. எனவே, கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கை தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். முழு ஊரடங்கு காரணமாக, பொதுமக்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மை தான்.

அதனால் தான், கொரோனா நிவாரண நிதியாக முதற்கட்டமாக 2,000 ரூபாய் கொடுத்துள்ளோம். விரைவில் அடுத்த 2,000 ரூபாயை கொடுக்கப் போகிறோம். இருந்தாலும், ஊரடங்கை நீட்டித்து கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது.

கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால், கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே, அரசின் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால் தான், இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

இந்த இரண்டாவது அலையானது, தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்புக்கும் நிதி நிலைமைக்கும், கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதிலிருந்து, நாம் விரைவில் மீண்டாக வேண்டும். கொரோனா தொற்றை வெல்வோம்; நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X