இலங்கையிலிருந்து சீனா வாயிலாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கையிலிருந்து சீனா வாயிலாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 01, 2021 | கருத்துகள் (19)
Share
சென்னை:'இலங்கையில் இருந்து சீனா வாயிலாக,இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கை வெளியுறவு கொள்கையில், இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:இலங்கை அரசு, தமிழக எல்லையை ஒட்டியுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும், சீனாவுக்கு
'இலங்கை, சீனா , நாட்டின் பாதுகாப்பு, அச்சுறுத்தல்

சென்னை:'இலங்கையில் இருந்து சீனா வாயிலாக,இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கை வெளியுறவு கொள்கையில், இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:இலங்கை அரசு, தமிழக எல்லையை ஒட்டியுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும், சீனாவுக்கு தாரைவார்த்துள்ளது.இதன் வாயிலாக இந்திய பாதுகாப்புக்கு, குறிப்பாக, தமிழகத்தின் பாதுகாப்புக்கு, இதுவரை இல்லாத அச்சுறுத்தல்ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் தெற்கில், அம்பாந்தோட்டையில் இருந்து, தமிழகத்தின் தென்பகுதிகளை சீனா கண்காணிக்கிறது.இலங்கையின் வடக்கில், தமிழகத்தின் ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு,அனைலை தீவு, நயினாத் தீவு போன்ற தீவுகளை, காற்றாலை மின்சாரம் தயாரிக்க, தனியார் நிறுவனங்கள் வாயிலாகபெற்றிருக்கிறது.கிட்டத்தட்ட தென் மாநிலங்களை சீனா சுற்றி வளைத்திருக்கிறது. எனவே, இலங்கையில் இருந்து சீனா வாயிலாக, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்ஏற்பட்டுள்ளது.

இதற்கு, இந்திய அரசின் தவறான இலங்கை வெளியுறவு கொள்கையே காரணம். எனவே, இலங்கையை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற கொள்கை நிலைப்பாட்டை இந்தியாதொடரக் கூடாது.மாறாக, சீனாவின் நண்பன் என்ற கோணத்தில் தான், இலங்கையை பார்க்க வேண்டும். அதற்கேற்ற வகையில், இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பாதுகாப்பு குறித்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.அதற்கான முதல்கட்டமாக, கச்சத்தீவை திரும்ப பெற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X