ஐதராபாத் ;ரஷ்யாவிலிருந்து 30 லட்சம் 'டோஸ்' ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள், ஐதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தன. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி மற்றும் சந்தைப்படுத்துதல் உரிமத்தை தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 'டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரி' நிறுவனம் பெற்று உள்ளது.
இந்த தடுப்பூசிக்கான கிளினிக்கல் பரிசோதனையையும், ரெட்டிஸ் நிறுவனம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து முதல் கட்டமாக 1.25 கோடி டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்ய ரெட்டிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த மாதம் மூன்று லட்சம் டோஸ் தடுப்பூசிகள், தெலுங்கானா மாநிலம் ஐதராபாதுக்கு வந்தன.
இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் 30 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள், ஐதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று வந்தன. அப்பலோ குழும மருத்துவமனைகள், ஸ்புட்னிக் தடுப்பூசியை இம்மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து, மக்களுக்கு செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளன. ஒரு டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை 1,195 ரூபாயாகவும் நிர்ணயித்துஉள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE