பொது செய்தி

இந்தியா

30 லட்சம் 'டோஸ்' ஸ்புட்னிக் : ஐதராபாத் வந்து சேர்ந்தது

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஐதராபாத் ;ரஷ்யாவிலிருந்து 30 லட்சம் 'டோஸ்' ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள், ஐதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தன. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி மற்றும் சந்தைப்படுத்துதல் உரிமத்தை தெலுங்கானா
30 லட்சம் 'டோஸ்' ஸ்புட்னிக்  ஐதராபாத் வந்து சேர்ந்தது

ஐதராபாத் ;ரஷ்யாவிலிருந்து 30 லட்சம் 'டோஸ்' ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள், ஐதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தன. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி மற்றும் சந்தைப்படுத்துதல் உரிமத்தை தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 'டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரி' நிறுவனம் பெற்று உள்ளது.


latest tamil news



இந்த தடுப்பூசிக்கான கிளினிக்கல் பரிசோதனையையும், ரெட்டிஸ் நிறுவனம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து முதல் கட்டமாக 1.25 கோடி டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்ய ரெட்டிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த மாதம் மூன்று லட்சம் டோஸ் தடுப்பூசிகள், தெலுங்கானா மாநிலம் ஐதராபாதுக்கு வந்தன.

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் 30 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள், ஐதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று வந்தன. அப்பலோ குழும மருத்துவமனைகள், ஸ்புட்னிக் தடுப்பூசியை இம்மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து, மக்களுக்கு செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளன. ஒரு டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை 1,195 ரூபாயாகவும் நிர்ணயித்துஉள்ளன.



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
02-ஜூன்-202108:45:52 IST Report Abuse
VENKATASUBRAMANIAN தலபுராணம் இப்போதுதான் தூங்கி எழுந்துள்ளீர்களா. முட்டாள்தனமாக பேசுவது என்று முடிவு எடுத்துள்ளீர்களா. இதற்கு ஏற்கனவே பதில் சொல்லியற்று ஆனால் இப்போது சாவகாசமாக மோடியை பற்றி பேசவேண்டும் என்று எதையாவது உளறுகிறீர்கள். கமிஷன் அடிப்பது எல்லாம் காங்கிரஸ் திமுக வின் வேலை. உங்களை போன்றவர்களை ஏமாற்றுவது அவர்களுக்கு கை வந்த கலை உங்களை எல்லாம் கமிஷன் அடிக்காமல் செய்தது தான் மோடியின் வேலை. அதனாலதான் எல்லோரும் ஒன்று கூடி கூவுகிறீர்கள்.
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
02-ஜூன்-202113:53:05 IST Report Abuse
Dr. Suriyaதிருடனுக்கு எப்போதும் அடுத்தவன் திருடிடுவானோங்கிற சந்தேகம் இருக்கத்தானே செய்யும்........
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
02-ஜூன்-202101:00:59 IST Report Abuse
மதுரை விருமாண்டி பஞ்சு மூட்டை கோடவுனிலேயே இருந்திருக்கலாம்.. இங்கே தயாராகுற மருந்தை மோடி சர்க்கார் கமிசன் அடிச்சிட்டு ஏற்றுமதி பண்ணுமாம் ... மாநிலங்கள் மக்களின் உசிரை காக்க வெளிநாட்டிலிருந்து இறக்குமதி பண்ணுமாம்.. துக்ளக் தர்பார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X